ரோகித் கிடையாது.. இப்போது உலகின் நம்பர் 1 கேப்டன் இவர்தான் – தினேஷ் கார்த்திக் தேர்வு

0
209
Rohit

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது உலகின் சிறந்த கேப்டனாக தனது நண்பர் ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்காமல் இன்னொரு அணியின் கேப்டனை தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்திற்கு உள்ளே மட்டும் இல்லாமல் வெளியேயும் வீரர்களை சிறப்பான முறையில் கையாள்வதில் சிறந்தவர் என்று பலரும் கூறுவார்கள். மேலும் போட்டிக்கான திட்டத்தை உருவாக்குவதில் பயிற்சியாளரை விட அதிகம் பங்களிப்பு செய்பவர் என்றும் அஸ்வின் வரையில் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

அணி உருவாக்கத்தில் கேப்டன்

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இது பயிற்சியாளரை விட கேப்டன் அதிக அளவில் பங்களிக்க கூடிய விளையாட்டாக இருந்து வருகிறது. களத்தில் கேப்டன் எடுக்கும் முடிவுகள் போட்டியை மாற்றக் கூடியதாக இருப்பதால், கேப்டன் ரோல் கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமானது. பயிற்சியாளரின் பங்கு களத்திற்கு வெளியே முடிவடைந்து விடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு கேப்டன் அணிக்கான ஒரு கலாச்சாரத்தை உருவாக்க கூடியவராகவும் இருக்கிறார். உதாரணமாக ரிக்கி பாண்டிங் காலத்தில் ஆஸ்திரேலிய அணி ஆக்ரோஷமான முறையில் களத்தில் செயல்படுவதையும் விளையாடுவதையும் கலாச்சாரமாக கொண்டிருந்த அணியாக இருந்தது. விராட் கோலி தலைமையில் எந்த சூழ்நிலையிலும் வெற்றியை நோக்கி விளையாடுவதையே கலாச்சாரமாக இந்திய அணி கொண்டு இருந்தது. இப்படி கேப்டன்கள்தான் அணிக்கு ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகிறார்கள்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக்கின் தேர்வு

தினேஷ் கார்த்திக் ரோஹித் சர்மாவை ஒரு கேப்டனாக பெரிய அளவில் மதிப்பிடக் கூடியவராக இருந்திருக்கிறார். மேலும் கிரிக்கெட்டில் அவருக்கு சிறந்த நண்பராகவும் ரோஹித் சர்மா இருக்கிறார். இருந்த போதிலும் கூட இவரைத் தாண்டி ஆஸ்திரேலிய கேப்டன் பேக் கம்மின்ஸை தற்போது உலகின் சிறந்த கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கம்பீர் கங்குலியை அசிங்கமாக திட்டினார்.. என் குடும்பத்தையும் திட்டினார் – மனோஜ் திவாரி மீண்டும் குற்றச்சாட்டு

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “கம்மின்ஸ் தற்பொழுது கிரிக்கெட் உலகத்தின் மிகவும் ஆக்ரோஷமான வீரர் என்று நான் உணர்கிறேன். மேலும் அவர் அது குறித்து பேசுவதோ அல்லது எதிரணியிடம் தவறாக பேசுவதோ எதையும் செய்வது கிடையாது. அவர் உடல் மொழி மற்றும் ஊடகங்களை கையாளும் விதம் மூலம் இதைச் செய்கிறார். ஒரு அணியை சிறப்பாக வழிநடத்தும் திறன் அவரிடம் இருக்கிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் கேப்டனாக நான் அவரையே தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -