இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சுப்மன் கில்லுக்கு பேட்டிங்கில் இருக்கும் டெக்னிக்கல் ரீதியான பிரச்சனை என்ன? என்பது குறித்து விரிவாக பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வெறும் 60 ரன் மட்டுமே 20 ரன் ஆவரேஜில் எடுத்திருக்கிறார். மேலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் மலிவானதாக கவலை அளிப்பதாக இருக்கிறது.
சுப்மன் கில்லிடம் இருக்கும் பிரச்சனை
இது குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவிக்கும் பொழுது “சுப்மன் கில்லிடம் நிச்சயமாக ஒரு பிரச்சனை பேட்டிங்கில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அது என்னவென்றால் அவர் கடினமாக பேட்டை வைத்து பந்தை தள்ளுகிறார். நீங்கள் அதிகம் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடும் பொழுது இப்படி நடக்கிறது. எனவே நீங்கள் அதை தொடர்ந்து செய்ய முயற்சி செய்கிறீர்கள்”
“டிராவிஸ் ஹெட் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு அவர் தனக்கென்று ஒரு வழிமுறையை கண்டறிந்து வைத்திருக்கிறார். தற்போது இந்த வலையில்தான் நம்முடைய கில் விழுந்து விட்டார். பந்து வீச்சாளர் பந்தை ரிலீஸ் செய்யும் பொழுது, அது ஃபுல் லென்த்தாக இருக்கப் போகிறது, ஷாட்டுக்கு செல்ல வேண்டும் என்று உங்கள் மனம் விரும்ப ஆரம்பித்து விடுகிறது”
இதைத்தான் செய்ய வேண்டும்
“ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சென்று விளையாடும் பொழுது வீரர்கள் பயிற்சியிலேயே ஃபுல் லென்த் பந்தை விளையாடுவதற்கு சாஃப்ட் ஹேண்ட்சில் விளையாடுகிறார்கள். அல்லது மிக அதிகமாக கவனம் கொடுத்து பார்த்து விளையாடுகிறார்கள். அதாவது பந்தை உடலுக்கு அருகில் வர விட்டு தாமதமாக விளையாடுகிறார்கள்”
இதையும் படிங்க : இந்திய அணியில் அஸ்வின் இடத்துக்கு.. இணைய இருக்கும் புதிய வீரர் யார்?.. வெளியான தகவல்கள்
“இவ்வளவு காலம் இந்திய அணியில் விளையாடு வரும் கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிக சாதாரணமான ஒரு ஷாட்டை விளையாடி ஆட்டம் இழந்தார். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்திய பேட்டிங் யூனிட் சில காலமாக சரியாக செயல்படவில்லை. ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் அவர்கள் தங்களுக்கு தாங்களே அழுத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






