ஹாட்ரிக் 50.. அஸ்வின் அதிரடியில் திண்டுக்கல் சாம்பியன்.. ஷாருக்கானின் கோவை தோல்வி.. டிஎன்பிஎல் 2024

0
15075

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் மற்றும் குவாலிபயர் போட்டிகள் முடிவடைந்து இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் ஐபிஎல் நட்சத்திரங்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஏமாற்றினார்கள். மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுஜாய் 27 ரன்களும், ரகுமான் 17 பந்துகளில் 25 ரன்களும், மேலும் தொடக்க ஆட்டக்காரரான சுஜாய் 12 பந்துகளில் 22 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் அஸ்வின் 4 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளும், பி. விக்னேஷ் இரண்டு விக்கெட்டுகளும் வாரியர் இரண்டு விக்கெட்டுகளும் சுபாத் ஒருவிக்கட்டும் வீழ்த்தினார்கள். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி களம் இறங்கியது. திண்டுக்கல் அணி தொடக்கத்தில் 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் இந்திரஜித் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு தொடர்ந்து 3வது அரைசதமாகும். மற்றொரு பேட்ஸ்மேன் இந்திரஜித் 32 ரன்களில் வெளியேறினார். அதற்குப் பிறகு இறுதியில் அதிரடியாக விளையாடிய சரத்குமார் 18.2வது பந்தில் சிக்ஸர் அடித்து திண்டுக்கல் அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.15 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்கள் குவித்து சரத்குமார் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க:முதல்ல அவங்களுக்கு கிரெடிட் கொடுங்க.. எனக்கு நம்பிக்கையே ரோஹித் கிட்டதான் வந்தது – ஆட்டநாயகன் வாண்டார்சே மகிழ்ச்சி

இதன் மூலம் அஸ்வின் தலைமையில் ஆன திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசனில் கோவை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இரண்டாவது முறையாக கைப்பற்றும் வாய்ப்பு கோவை அணிக்கு நழுவியது.

- Advertisement -