மகளிர் ஆசிய கோப்பை.. 201 ரன்.. ஹர்மன்பிரீத் ரிச்சா கோஷ் சூறாவளி பேட்டிங்.. இந்தியா யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தியது

0
321

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ரிச்சா கோஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற யுனைடெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய செபாலி வர்மா மற்றும் மந்தனா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் குவித்தனர். மந்தனா 13 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹேமலதா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் செபாலி வர்மா 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 47 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 66 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய ரிச்சா கோஸ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 64 ரன்கள் குவித்தார். டி20 கிரிக்கெட் பொருத்தவரை 200 ஸ்ட்ரைக் ரைட்டில் 50க்கும் அதிகமான ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்று பெருமையைப் பெற்றார். முதல் வீரராக கேஎல் ராகுல் 2020 ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார். இதனால் இந்திய அணி 201 ரன்களை யுனைடெட் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய யுனைடெட் அணி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஓஷா மற்றும் கவிஷா ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். ரோஹித் ஓஜா 36 பந்துகளில் 38 ரன்கள் குவிக்க, மிடில் வரிசையில் கவிஷா 32 பந்துகளில் 40 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதையும் படிங்க:மலிங்கா, பும்ரா இல்லை.. இவர்தான் வரலாற்றில் சிறந்த யார்க்கர் பந்தை வீசியவர் – ஸ்டெய்ன் வெளிப்படையான பாராட்டு

மற்ற வீராங்கனைகள் அனைவரும் பந்துகளை வீணடித்ததால் யுனைடெட் அணி இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே குவித்தது. பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். தற்போது இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்திருக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதோடு இந்த போட்டியில் இரண்டாவது வெற்றியும் பெற்றிருப்பதால் நான்கு புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -