இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என ஆரம்பத்தில் பேசப்பட்ட காலத்தில் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. தற்போது அவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்து விட்டார். கபீர் எந்த மாதிரி நடந்து கொள்ளக் கூடியவர் என ஆஷிஷ் நெக்ரா கூறி இருக்கிறார்.
கம்பீர் விளையாடும் காலத்தில் இருந்தே அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும், அதே சமயத்தில் காலத்தில் கடைசி வரை கடுமையாக போராடக் கூடியவராகவும் இருந்து வந்திருக்கிறார். அவர் விளையாடும் அணி எதுவாக இருந்தாலும் 100% கொடுக்கக் கூடியவர்.
மேலும் தான் விளையாடும் அணியில் மற்றவர்களும் தன்னைப் போலவே இருக்க வேண்டும் போட்டியை அணுக வேண்டும் என நினைக்கக் கூடியவர். தோனி போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று முடிப்பதில், தோனி தலைமையின் கீழ் விளையாடினாலும் கம்பீர் அதை ஏற்றுக் கொண்டது இல்லை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது போட்டியை முடித்து விட வேண்டும் என்று கம்பீர் கூறுவார்.
நேற்று இலங்கை அணிக்கு எதிராக தொடரை வென்ற பிறகு அணி கூட்டத்தில் பேசியிருந்த கம்பீர் அணியினரை பாராட்டிய அதே நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடாமல் ஓய்வுக்கு செல்ல இருக்கும் வீரர்கள், அணிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டுமென்றால், தங்கள் திறமையையும் உடல் தகுதியையும் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையும் செய்திருந்தார்.
தற்போது கம்பீர் பற்றி பேசி இருக்கும் ஆஷிஷ் நெக்ரா கூறும்பொழுது “எனக்கு கம்பீரை பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் அப்போது பார்த்தது போல்தான் இப்போதும் இருக்கிறார். அவர் உணர்ச்சிவசப்படக் கூடியவர் மேலும் கடுமையாக உழைக்கக் கூடியவர். அதேபோல எப்பொழுதும் வெளிப்படையாக இருக்கக்கூடியவர். மேலும் அவர் பேசுகின்ற வார்த்தைகளை யாருக்காகவும் குறைத்துக் கொள்ள மாட்டார். வெளிப்படையாகத்தான் பேசுவார். அவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாக வரும் என நான் நம்புகிறேன்.
இதையும் படிங்க :
அதாவது நீங்கள் முடிவுகளின் படி பார்த்தால் கடந்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் மிகவும் சிறப்பான முறையில் முன்னேறி வருகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் இதே சிறப்பான முறையில்தான் தொடர்ந்து செல்ல போகிறது. நான் ஏற்கனவே சொல்லி இருந்தது போல இது பார்ப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்






