ரோகித் சர்மாவை காப்பாற்றி விராட் கோலிக்கு எதிராக செயல்பட்டாரா நடுவர் நிதின் மேனன்? ரசிகர்கள் ட்விட்டரில் கோபம்!

0
583
Nitin Menon

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்பொழுது இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்த டெஸ்ட் தொடரில் முதலில் நாக்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் உள்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் குகனைன் ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்திய தரப்பில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 30 ரன்னை தொடவில்லை.

இந்தப் டெஸ்ட் தொடரில் காயம் குணமடைந்து முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தனது முதல் ஓவரிலேயே இரண்டு முறை ரோகித் சர்மாவை வீழ்த்தினார். ஆனால் நடுவர் நிதின் மேனன் அவுட் தரவில்லை. ஆஸ்திரேலியா அணியும் அப்பீலுக்கு போகவில்லை. இதே போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இன்சைட் எட்ஜ் இருக்க நிதின் மேனன் எல் பி டபிள்யூ தந்தார். அப்பில் செய்து பார்த்ததில் அவுட் இல்லை என்று முடிவானது. சிறப்பாக விளையாடிய விராட் கோலிக்கு உடனே அவுட் என்று கையை தூக்கி முடித்து வைத்தார்.

இதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 40 ரன்கள் தாண்டி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி எப்படியும் இந்த முறை சதம் தொடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தபொழுது, பேட் மற்றும் கால்காப்பில் சந்தேகத்திற்கு இடமான படி பந்து பட்டத்திற்கு நிதின் மேனன் அவுட்டு கொடுக்க, மூன்றாவது நடுவரும் சந்தேகத்திற்குகிடமான பலனை விராட் கோலிக்கு தராமல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவுட் கொடுத்தார்.

- Advertisement -

தற்பொழுது நடுவர் நிதின் மேனன் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் விராட் கோலிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை முன் வைத்து வருகிறார்கள். சில ரசிகர்களின் ட்விட்டர் பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!