இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் ஆன சேத்தேஸ்வர் புஜாரா நேற்று டெஸ்ட் கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா குறித்தும் விராட் கோலி குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா நேற்று டெஸ்ட் கிரிக்கெட் உட்பட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். புஜாரா மொத்தமாக 104 டெஸ்ட் போட்டிகள் உட்பட, ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்திய அணியின் கடைசி டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா ஓய்வு முடிவை அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் களம் இறங்கும் புஜாரா விராட் கோலி விளையாடுவதற்கு முன்பாக போட்டியின் சூழ்நிலையை சீராக அமைப்பதில் கைதேர்ந்தவர் என 2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியை நினைவு கூர்ந்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ அல்லது இல்லையோ மூன்றாவது இடத்தில் களமிறங்கும் புஜாராவின் பங்களிப்பு விராட் கோலி அதிக அளவில் ரன்கள் எடுக்க உதவி இருக்கிறது. அதற்கு முக்கியமாக ஒரு உதாரணம் உள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெற்ற வான்டர்சசில் நடைபெற்று இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் ஆடுகளம் மிகவும் ஆபத்தாக காணப்பட்டது. அதில் புஜாரா 53 டாட் பந்துகளை சந்தித்து விட்டு தான் 54 ஆவது பந்தில் முதல் ரன்னை எடுத்தார். உண்மையிலேயே அந்த ஆடுகளத்தில் பந்து எல்லா பக்கமும் சென்று கொண்டிருந்தது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:கம்பீர் நயவஞ்சகர்.. இப்ப இந்தியா பாக் கூட ஆடுது.. பதவியை ராஜினாமா பண்ணுவாரா? – மனோஜ் திவாரி விமர்சனம்
அந்த டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்ஸ் விளையாடிய தென்னாபிரிக்க அணி 194 ரன்கள் குவிக்க, விராட் கோலி மற்றும் புஜாராவின் சிறப்பான அரை சதத்தால் இந்திய அணி 187 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக விராட் கோலி நான்காவது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக விளையாடியதற்கு புஜாரா மூன்றாவது இடத்தில் ஆடுகளத்தின் தன்மையும் பந்தின் தன்மையையும் பெருமளவு மாற்றி அமைத்திருக்கிறார் என அஸ்வின் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.






