கவலைப்படாத உன் ஆப்ரேஷன் நடக்கும் – மைதானத்தில் ரசிகருக்கு தல தோனி தந்த வாக்குறுதி

0
729
Dhoni

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் கூட மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் ரசிகர்களிடம் இருக்கும் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறது. தற்போதும் அப்படி ஒரு அருமையான சம்பவம் நடந்ததை ரசிகர் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்காக விளையாடுவதாக ஏற்கனவே தோனி அறிவித்திருந்தார். இதற்காக கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்து சிறப்பான முறையில் ஐபிஎல் பயிற்சிக்கு வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பாராத விதமாக தசைக்கிழிவு காயம் ஏற்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக அவரால் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடி ரன்கள் எடுக்க முடியாது. இதனால் அவர் பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாட முடியவில்லை. எனவே அவர் கடைசி இரண்டு ஓவர்களுக்கு மட்டும் பேட்டிங் செய்யும் வகையில் தன்னுடைய பேட்டிங்கை சுருக்கிக்கொண்டார்.

மேலும் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அணியில் இளம் வயது விக்கெட் கீப்பர் மட்டுமே இருந்ததால், தொடர்ந்து விக்கெட் கீப்பராக களத்திற்கு வந்து ருதுராஜுக்கு கேப்டன்சி செய்வதில் சில ஒத்துழைப்பை தந்தார். இல்லையென்றால் கான்வே இருந்திருந்தால் தோனி ஓய்வெடுத்து இருப்பார் என்று சிஎஸ்கே தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக விளையாடும் பொழுது மைதானத்திற்கு உள்ளே ஓடி வந்த ரசிகர் ஒருவர் தோனியின் கால்களில் விழுந்தார். பின்பு அவரை அணைத்துக் கொண்ட தோனி, அந்த ரசிகர் ஏதோ கூறுவதைக் கேட்டு, சிரித்த முகத்துடன் அவரிடம் ஏதோ பேசினார். பின்பு வந்த பாதுகாவலர்களிடம் அவரை பத்திரமாக விடுமாறும் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 டி20 உலககோப்பை.. கவனிக்க வேண்டிய 5 முக்கியமான கலக்கல் பேட்ஸ்மேன்கள்

தற்பொழுது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்த ரசிகரே கூறும்பொழுது “நான் மைதானத்திற்குள் ஓடி சென்றேன். தோனி அவரை நெருங்கி விட்ட பின்பு கால்களில் விழுந்தேன். பின்பு நான் அவரிடம் என்னுடைய மூச்சுத் திணறல் பற்றிய பிரச்சனையையும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதையும் கூறினேன். இதைக் கேட்ட அவர் ‘நான் உன்னுடைய அறுவை சிகிச்சையை பார்த்துக் கொள்கிறேன். உனக்குஎதுவும் நடக்காது. நீகவலைப்படாதே. உனக்கு எதுவும் ஆவதற்கு நான் விடமாட்டேன் என்று சொன்னார” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது.