வீடியோ: “யாருக்குடா வயசாச்சு..” மின்னல்வேக ஸ்டம்பிங்.. கதிகலங்கிய கில் அவுட்!

0
834

அதிரடியாக ஆடிவந்த கில் விக்கெட்டை மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து தூக்கியுள்ளார் தோனி. இதன் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் 28ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் பைனல் மழையின் குறுக்கீடு காரணமாக முதல் நாள் தடைப்பட்டது. ரிசர்வ் நாள் அன்று மாற்றப்பட்டது. இன்று பைனலில் மோதும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சகா மற்றும் கில் இருவரும் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தனர். போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே கில் அடித்த பந்து தீபக் சகர் வசம் சென்றது. எளிதான கேட்சை அவர் தவறவிட்டார். மூன்று ரன்களில் இருந்த கில், அதன் பிறகு அதிரடியாக விளையாடி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்தார்.

20 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்தபோது, ஜடேஜா டர்ன் செய்த பந்தை இறங்கி அடிக்க முயற்சித்தார் கில். பெரிதளவில் இறங்கவில்லை. காலை சில இன்ச்கள் மட்டுமே வெளியே வைத்து மீண்டும் உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார். இந்த இடைவெளிக்குள் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து கில் விக்கெட்டை தூக்கினார் தோனி. விடியோவை கீழே பார்க்கலாம்.

அதன் பிறகும் நிறுத்தாமல் அதிரடியாக விளையாடி வந்த விருதிமான் சகா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். உள்ளே வந்த சாய் சுதர்சன் இவருக்கு பக்கபலமாக விளையாடிவர, இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 50+ பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுகிறது.

- Advertisement -