“தோனி செஞ்சத செய்யல அதான் உலகக் கோப்பையை ஜெயிக்கல” – ரோகித் டிராவிட்டை குத்திக் காட்டிய அஸ்வின்!

0
2538
Ashwin

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் உலக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தும் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து பட்டத்தை இரண்டாவது முறையாக தவறவிட்டது. இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அணித்தேர்வு பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

- Advertisement -

இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆதங்கத்தை மிகவும் நாகரிகமாக முறையில் அதே சமயத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்றோம் சில இடங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்று இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் ” முதலில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணியினருக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இதற்கு மிகத் தகுதியானவர்கள். லபுசேன் போன்ற சில வீரர்கள் மட்டும் சில நாட்கள் சேர்த்து இங்கிலாந்தில் விளையாடியிருந்தார்கள்.

இது ஒரு சிறிய நன்மை மட்டுமே. ஆனால் இதுவெல்லாம் ஒரே ஒரு ஆட்டத்தில் பட்டம் என்கின்ற பெரிய ஆட்டத்திற்குப் பொருந்தாது. இந்தியா போன்று அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரக்கூடியவர்கள். இந்தத் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்.

- Advertisement -

அடுத்து இந்திய அணிக்கு உலகக்கோப்பை வருகிறது. சமூக வலைதளத்தில் அந்த வீரரை நீக்கு இந்த வீரரை எடு என்று பல கருத்துகளை என்னால் பார்க்க முடிகிறது. ஒரு வீரரின் தரம் ஒரே போட்டியில் எல்லாம் மாறிவிடாது.

மகேந்திர சிங் தோனி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று பல பேச்சுகள் காணப்படுகிறது. அவர் கேப்டனாக இருந்த பொழுது அப்படி என்ன செய்தார்? நான் அவரது கேப்டன்சியின் கீழ் விளையாடிய பொழுது அவர் என்ன செய்தார்?

அவரிடம் எப்பொழுதும் ஒரே 15 பேர் கொண்ட அணிதான் இருக்கும். அதிலிருந்து ஒரே 11 பேர்தான் தொடர்ந்து விளையாடுவார்கள். இது ஒரு வருடம் என்றாலும் நீளும். இதன் மூலம் ஒரு வீரருக்குப் பாதுகாப்பு உணர்வை அவர் ஏற்படுத்துவார். அந்த வீரர் தம் கேப்டனுக்காக அந்த இடத்தில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு பங்களிப்பு செய்வார். வீரர்களுக்கு பாதுகாப்பைப் வழங்குவதுதான் மிகவும் முக்கியம். இதைத்தான் மகேந்திர சிங் தோனி செய்தார்” என்று கூறியிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த கருத்தின் மூலம் மறைமுகமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரது செயல்பாட்டையும் விமர்சனம் செய்தே கூறியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது!