“தோனி இந்த தப்ப செஞ்சே இருக்க மாட்டார்!” – பாபர் அசாமை விளாசிய வாட்சன் ரவி சாஸ்திரி!

0
4008
Watson

நேற்று பாகிஸ்தான் அணி தொடர்ச்சியான நான்கு தோல்விகளுக்கு பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு சிறிது நீடிக்க செய்கிறது.

நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் ஷாகின் அப்ரிடி விக்கெட் எடுத்து கொடுத்தார். அதேபோல் பேட்டிங் பவர் பிளேவில் பகார் ஜமாத் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக பங்களாதேஷ் அணியை 24 ரன்களுக்கு சுருட்டி, அந்த இலக்கை 32 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் துரத்தி வெல்ல முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியில் பகார் ஜமான் சரியாக விளையாடவில்லை. அதற்கு அடுத்து அவர் நீக்கப்பட்டு ஐந்து போட்டிகளாக வெளியில அமர வைக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

நேற்று ஆறாவது போட்டிக்குதான் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 74 பந்துகளை சந்தித்த அவர் நேற்று 81 ரன்கள் எடுத்தார்.

பகார் ஜமானை பொருத்தவரை அவர் ஒரு அதிரடியான மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன். அவரிடமிருந்து தொடர்ச்சியான சீரான ரன்களை எதிர்பார்க்க முடியாது.ஆனால் தாக்கம் நிறைந்த ரன்களை அவரால் எடுத்துக் கொடுக்க முடியும். எல்லா அணிக்கும் மேல் வரிசையில் ஒரு வீரர் இப்படி தேவை.

ஆனால் பாகிஸ்தானின் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணத்தினால் இவர் போன்ற ஒரு அதிரடியான வீரரை பிளேயிங் லெவனில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு கிடைக்கும் துவக்கம் மிகவும் மந்தமாகவே இருந்தது. நேற்றைய போட்டியில், அப்படி ஒரு வீரர் விளையாடினால், எப்படியான துவக்கம் கிடைக்கும் என்று தெரிந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஷேன் வாட்சன் பேசும் பொழுது ” எனக்குத் தெரிந்த கேப்டன் ஒருவர் மேட்ச் வின்னர்கள் மீது எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருப்பார். அவர்கள் நன்றாக வருவார்கள் என்று தெரிந்து அவர்களுடன் ஒட்டிக் கொள்வார். அதுதான் மகேந்திர சிங் தோனி!” என்று கூறி இருக்கிறார்!

அப்பொழுது வாட்சன் உடன் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” ஆமாம் இது உண்மை. நிச்சயமாக மகேந்திர சிங் தோனி பகார் ஜமானை நீக்கி இருக்க மாட்டார். அவரை வைத்துதான் அவர் விளையாடியிருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -