“தோனிதான் உலகக் கோப்பை ஜெயிச்சாரு நாங்க பத்து பேர் சும்மாதான் இருந்தோம்” – கடுப்பான ஹர்பஜன்சிங்!

0
1226

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இரண்டாவது முறையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தவறவிட்டது!

இந்தப் போட்டிக்குத் தற்பொழுது உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆனால் பந்துவீச்சுக்கான எந்தவித திட்டங்களும் இல்லாமல் மிகச்சாதாரணமாக செயல்பட்டதான குற்றச்சாட்டும் இருக்கிறது. பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடவில்லை. இதுவெல்லாம் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

தற்பொழுது சமூக வலைதளங்களில் ஐசிசி உலகக் கோப்பைகளை வெல்ல மகேந்திர சிங் தோனி ஒருவரால்தான் முடியும் மற்றவர்களுக்கு அந்தத் திறமை இல்லை என்று பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதேபோல் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் மற்றும் இந்திய அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பொழுது விளையாடிய ஹர்பஜன்சிங் கோபமான அதே சமயத்தில் கேலியான பதில் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

“பயிற்சியாளர் இல்லை; வழிகாட்டி இல்லை; மூத்த வீரர்கள் இல்லை. அதற்கு முன்னால் கேப்டனாக ஒரு போட்டியைக் கூட வழிநடத்தவில்லை. ஆனாலும் 2007 டி20 உலகக்கோப்பையில் அப்போதைய ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி 48 நாட்களில் உலகக் கோப்பையையும் கைப்பற்றினார் தோனி!” என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஹர்பஜன்சிங்
” ஆமாம் அப்பொழுது இந்தியாவுக்காக நீங்கள் குறிப்பிடும் இந்தச் சிறுவன் மட்டும்தான் தனியாக விளையாடினார். மற்ற பத்துப் பேரும் விளையாடவில்லை. எனவே இவர்தான் தனியாக விளையாடி இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வாங்கி தந்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உலகக் கோப்பை மாதிரியான கோப்பைகளை வென்றால் அந்த நாடு வென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கேப்டன் வென்றதாகச் சொல்கிறார்கள். இது ஒரு டீம் விளையாட்டு. இங்கு ஒன்றாக வெல்வோம்; ஒன்றாகத் தோற்போம்!” என்று நகைச்சுவையாகவும் அதே சமயத்தில் கோபமாகவும் தெரிவித்திருக்கிறார்!