சிஎஸ்கே தோல்வி.. முதல் இடத்துக்கு வந்த சச்சின்.. கீழே இறங்கிய தோனி.. ஆச்சரியமான புள்ளி விபரம்

0
47
Dhoni

நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கேகேஆர் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த காரணத்தினால், கேப்டனாக தோனிக்கு இருந்த பெரிய சாதனையில் கீழே இறங்கினார். அதே சமயத்தில் எப்பொழுதோ கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் முதல் இடத்தை பிடித்தார்.

இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறிய காரணத்தினால் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். மேலும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இருந்தார்கள். எனவே மகேந்திர சிங் தோனியின் மேஜிக் மீண்டும் நடைபெறப் போகிறது சிஎஸ்கே அணி வெற்றிப்பாதையில் திரும்ப போகிறது என ரசிகர்கள் பரவலாக எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

இருப்பதிலேயே மோசமான தோல்வி

இப்படியான நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியால் வெறும் 103 ரன்கள் மட்டுமே 20 ஓவர்கள் விளையாடியும் எடுக்க முடிந்தது. கூடுதலாக இம்பேக்ட் பிளேயரில் ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வந்தும் கூட 120 ரன்கள் எடுக்க முடியவில்லை. தோனி நான்கு பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்து நரைன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியை எந்த இடத்திலும் சிஎஸ்கே அணியால் மெதுவான ஆடுகளத்தில் சிரமப்பட வைக்க முடியவில்லை. பவர் பிளேவில் 70 ரன்கள் கடந்த கொல்கத்தா அணி 10.1 ஓவரில் இலக்கை எட்டி வெகு எளிதாக வெற்றி பெற்றது. இந்த சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாது என்பது போல தோற்றமளிக்கிறது.

- Advertisement -

மகுடத்தை இழந்த தோனி

இந்த போட்டிக்கு முன்பாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக 226 போட்டிகளில் செயல்பட்டு வெற்றி சதவீதமாக 58.84% கொண்டு, அதிக வெற்றி சதவீதம் பெற்றிருக்கும் கேப்டன்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தார். தோனியின் இந்த சாதனையை இனி ஒரு வீரர் கேப்டனாக முறியடிப்பது கடினமான காரியம் என கருதப்பட்டது.

இந்த நிலையில்தான் ருதுராஜ் வெளியேறியதால் மீண்டும் தோனி கேப்டனாக வந்து முதல் போட்டியில் தோற்றார். அவருடைய 58.59 என கீழே இறங்கியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் 51 போட்டிகளில் கேப்டனாக இருந்து வெற்றி சதவீதமாக 58.52 எனக் கொண்டிருப்பதால் முதல் இடத்திற்கு முன்னேறினார். தோனி மீண்டும் கேப்டனாக வந்து தோற்றதால் விதி வித்தியாசமாக விளையாடிவிட்டது.

இதையும் படிங்க : சிஎஸ்கே திரும்ப ஜெயிக்க பத்ரிநாத் வேணும்.. இத மட்டும் செய்யுங்க கப் அடிக்கலாம் – ஹர்ஷா போக்லே பேட்டி

ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக வெற்றிகள் :
58.82- சச்சின் [51]
58.59 – தோனி [227]*
55.40 – ஷ்ரேயாஸ் [74]
55.06- ரோஹித் [158]
55.03 – கம்பீர் [129]
54.54-வார்ன் [55]
52.83- சேவாக் [53]
50.79 – சாம்சன் [63]
48.43 – ராகுல் [64]
48.19-வார்னர் [83]
47.29 கில்கிறிஸ்ட் [74]
46.15- கோஹ்லி [143]

- Advertisement -