2011 உலக கோப்பையில் தோனிதான் ரோகித்தை வேண்டாம் என்றார்.. இந்த பிளேயரை கேட்டார்.. முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் பரபரப்பு பேச்சு!

0
4357
Dhoni

இந்திய அணி கடைசியாக ஒரு உலகக் கோப்பை தொடரை வென்று 12 ஆண்டுகள் ஆகிறது. இறுதியாக இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதே கடைசியாக இருக்கிறது!

இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க இடத்தில் வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் இருந்தார்கள். மேலும் நடுவரசையில் யுவராஜ் சிங், விராட் கோலி ஆகியோர் வந்தார்கள். ஒட்டுமொத்தத்தில் மிகபலமான அணியாக இந்திய அணி அந்த உலகக்கோப்பை தொடரில் இருந்தது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பின்னால் வந்த விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அப்போதே பலரும் கேள்வி எழுப்பிய ஒரு விஷயமாக இருந்தது.

மேலும் கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னுடைய மனதை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வாக, 2011 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனதுதான் என்று பல இடங்களில் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

தற்பொழுது இது குறித்து அப்பொழுது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்திய தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்த ராஜா வெங்கட் பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
” உலகக் கோப்பை இந்திய அணியை தேர்ந்தெடுக்க நாங்கள் அமர்ந்திருந்த பொழுது எங்களிடம் உலகக்கோப்பைக்கான திட்டங்களில் ரோஹித் சர்மாவின் பெயரும் இருந்தது. நாங்கள் அணியை தேர்வு செய்த பொழுது முதல் 14 வீரர்களின் பெயர்களை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

நாங்கள் பதினைந்தாவது இடத்திற்கு ரோகித் சர்மா பெயரை தேர்ந்தெடுத்தோம். அப்போதைய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ரோகித் சர்மாவை நல்ல ஒரு தேர்வு என்று உணர்ந்தார். ஆனால் மகேந்திர சிங் தோனி ரோஹித் சர்மாவுக்கு பதில் பியூஸ் சாவ்லாவை சிறந்த தேர்வாக விரும்பினார். அந்த நேரத்தில் கேரி கிர்ஸ்டன் தடுமாறினார். ஆனால் மகேந்திர சிங் தோனி பியூஸ் சாவ்லா சிறந்த தேர்வு என்று கூற, ரோஹித் சர்மா எங்களது திட்டத்தில் இருந்து வெளியேறினார்.

அந்த நேரத்தில் எங்களுக்கு ரோஹித் சர்மாவிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தோம். நாங்கள் விரும்பியபடி 14 பேரை தேர்வு செய்தோம். ஆனால் பதினைந்தாவது நபரை தேர்வு செய்ய முடியவில்லை. அவர்கள் 14 பேர் ஏற்றுக்கொண்டு ஒருவரை அவர்கள் விருப்பத்திற்கு கேட்க, அதை விட்டு விடுவதாக இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!