இந்திய கிரிக்கெட்

பட்டையை கிளப்பும் சிஎஸ்கே இளம் வீரர்.. பின்னால் இருந்து பாராட்டி தள்ளிய தோனி.. மீண்டும் கிடைத்த மாற்று

நேற்று சிஎஸ்கே வலைப்பயிற்சியில் இளம் வீரர் ஒருவர் பேட்டிங் செய்ததை பின்னால் இருந்து பார்த்து மகேந்திர சிங் தோனி பாராட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட வேண்டிய முக்கிய வீரர்

கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே இளம் உள்நாட்டு வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் அதிகபட்ச தொகை கொடுத்து 14 புள்ளி இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. ஜடேஜா மற்றும் பணிக்கான இரண்டாவது விக்கெட் தேவைக்கு இரண்டு வீரர்களும் வாங்கப்பட்டுள்ளார்கள்.

இதில் பிரசாந்த் வீர் ஜடேஜாவுக்கு மாற்றாக வாங்கப்பட்டுள்ளார். மேலும் இவர் விளையாடும் பட்சத்தில் வெளிநாட்டு சுழல் பந்துவீச்சாளர் அகேல் உசைன் விளையாட வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதிலாக வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர் யாரையாவது விளையாட வைப்பார்கள். எனவே பிரசாந்த் வீர் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக மாறுகிறார்.

- Advertisement -

பாராட்டிய தோனி

நேற்று பிரசாந்த் வீர் வலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். மகேந்திர சிங் தோனி ஸ்டெப்ம்களுக்கு பின்னால் நின்று பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரசாந்த் வீர் முதல் பந்தை கவரில் அடிக்க மகேந்திர சிங் தோனி “ஷாட்” என்று சத்தமாக கூறி பாராட்டினார்.

இதையும் படிங்க : அகர்கர் செய்த வேலையால்.. கில் திரும்ப டி20 அணிக்கு வரப்போறார்.. ஐபிஎல்-ல் இது நடக்கும் – புஜாரா உறுதி

இதைத் தொடர்ந்து இரண்டாவது பந்தை திரும்பி ஸ்கூப் விளையாடி ஆச்சரியப்படுத்தினார். பின்னால் இருந்த தோனி அவர் விளையாடியதை போலவே சும்மா விளையாடி காட்டி பாராட்டினார். அடுத்த பந்தை இளம் வீரர் நேராக அடித்தார். அதுவும் அழகான ஷாட் ஆக அமைய தோனி அதற்கும் பாராட்டினார். ரவீந்திர ஜடேஜாவுக்கான மாற்று வீரரை தோனி தனது நேரடி பார்வையில் பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts