ரெய்னாவின் சிஎஸ்கே வரலாற்று சாதனை.. முறியடிக்க தோனிக்கு 180 ரன் தேவை.. இந்த சீசனில் நடக்குமா?

0
69
Raina

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிகவும் வெற்றிகரமான அணி என்பது தெரிந்த விஷயம். அதே சமயத்தில் சிஎஸ்கே அணிக்கு மிக வெற்றிகரமான வீரர் சுரேஷ் ரெய்னாதான். அவர் விளையாடாத இரண்டு ஆண்டுகளுமே சிஎஸ்கே அணிக்கு மிக மோசமாக அமைந்தது. மேலும் முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருந்தது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் மூன்றாவது இடத்தில் எப்படிப்பட்ட இருக்க வேண்டும்? அவர் எப்படி பேட்டிங்கை அணுக வேண்டும்? என்று சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா விளையாடியதன் மூலம், உலக டி20 கிரிக்கெட் க்கு ஒரு புரிதல் கிடைத்தது. அவர் டி20 கிரிக்கெட்டின் மூன்றாம் இடத்துக்கான டெம்ப்ளேட் போல மாறினார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் மதியம் ஓவர்களில் வீசப்படும் லெக் ஸ்பின் மற்றும் லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் என இந்த இரண்டு வகை பந்து வீச்சையும் அடித்து ரன்கள் எடுக்க, பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் அதிரடியாக விளையாடும் இடதுகை பேட்ஸ்மேன் தேவை. மேலும் அவர் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவருமாக இருந்தால் மிகவும் நல்லது என சுரேஷ் ரெய்னா மூலம் உலக டி20 கிரிக்கெட்டில் தெளிவு வந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விட்டு சென்ற அந்த இடத்திற்கு அடுத்த உடனே அவரைப் போலவே இடது கையில் பேட்டிங் செய்யும் வலது கையில் ஆப் ஸ்பின் வீசும் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே வரலாற்றில் சுரேஷ் ரெய்னா சாதனை

மேலும் ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் விளையாடி 32.32 ஆவரேஜில் 4687 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் மகேந்திர சிங் தோனி 39.89 ஆவரேஜில் 4508 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

எனவே நடைபெற இருக்கும் 17வது ஐபிஎல் சீசனில் மகேந்திர சிங் தோனி மேற்கொண்டு 180 ரன்கள் குவிப்பதன் மூலம், சிஎஸ்கே அணிக்கு அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வரலாற்றில் தோனியின் பெயர் முதல் இடத்தில் இடம்பெறும். ஆனால் தற்போது பேட்டிங் வரிசையில் கடைசியில் வருகின்ற காரணத்தினால், சுரேஷ் ரெய்னாவின் இந்த சாதனையை முறியடிப்பது கொஞ்சம் கடினம் என்றும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டம்..2024 ஐபிஎல் சீசனில் அறிமுகமாகிறது.. இனி தப்பவே முடியாது

மூன்றாவது இடத்தில் பாப் டு ப்ளிசிஸ் 92 போட்டிகளில் 2721 ரன்கள், நான்காவது இடத்தில் அம்பதி ராயுடு 90 போட்டிகளில் 1932 ரன்கள், ஐந்தாவது இடத்தில் ருதுராஜ் 52 போட்டிகளில் 1797 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிஎஸ்கே அணிக்கு அதிக ரன்கள் குவித்த வீரராக ருதுராஜ் வருவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர் தொடர்ச்சியாக சிஎஸ்கேவுக்கு விளையாடினால், தொடக்க ஆட்டக்காரராக இருப்பதாலும், வயது குறைவானவராக இருப்பதாலும் இந்த சாதனை அவருக்கே சொந்தமாகலாம்!