தோனி செம்மை ஃபிட்டா இருக்காரு.. இன்னும் 2-3 வருஷம் ஆடுவாரு – ரோகித் சர்மா பேட்டி!

0
248

தோனி மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆடுவார் என்று ரோகித் சர்மா கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் போட்டி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் நடைபெறுகிறது. அனைத்து வீரர்களும் தங்களது பயிற்சியில் இறங்கிவிட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியத்துவமான பும்ரா, இந்த வருடம் அவர் இல்லாதது சற்று பின்னடைவை கொடுத்து இருக்கிறது. அவருக்கு மாற்று வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் கொண்டுவரப்படும் என்றும் ரோகித் சர்மா தனது சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மா பேசுகையில், “முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக இருக்கிறது. அவர்களின் பலம் தெரியும். நாங்களும் சிறந்த 12 வீரர்களை களம் இறக்குவோம்.”

- Advertisement -

இந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் “இம்பாக்ட் ரூல்”கேட்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. டி20 போட்டிகளில் மேலும் மேலும் சுவாரசியத்தை கூட்டுகிறது. அதை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம்.”என்றார்.

மேலும் தோனி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுதான் கடைசி வருடமா? என்று பலரின் சந்தேகங்களுக்கு பதில் கூறினார். ரோஹித் சர்மா பேசியதாவது: “எனக்கு அப்படி தெரியவில்லை. தோனி மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். அவரது வயதை விட சிறப்பாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் அவர் விளையாடுவார். அந்த அளவிற்கு உடல் தகுதியுடன் இருக்கிறார்.” எனக்கூறினார்.

இந்தவருடம் உலகக்கோப்பை இருக்கிறது, ரோகித் சர்மாவின் பணிச்சுமை எவ்வாறு மேம்படுத்தப்படும்? சர்வதேச போட்டிகளுக்கு அவர் அவசியம், பணிச்சுமை எவ்வாறு சரி செய்யப்படும்? என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இடம் கேட்கப்பட்டபோது, “சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாங்கள் விளையாடுவோம். தேவை எனில் ரோகித் சர்மாவை 1-2 போட்டிகள் வெளியில் அமர வைப்பதில் எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.” என்றார்.