ஐபிஎல் 2024

ஐபிஎல் 2025ல் ஆடுவீங்களா.?.. தோனி கொடுத்த பதில்.. சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி மட்டும் சமூக வலைதளங்களில் சில ஆண்டுகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரிலேயே தற்போது அதிக வயது கொண்ட வீரராக மகேந்திர சிங் தோனி விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு காயமும் ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஐந்து முறை பட்டங்கள் வென்று கொடுத்த தோனி கடைசியாக 2023ஆம் ஆண்டு சென்னை அணியை சாம்பியன் பட்டம் வென்ற போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்துடனே ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடினார். இதனால் அடுத்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று சமூக வலைதளங்களில் பரவலான கருத்துக்கள் வந்த நிலையில் தனது ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை ஐபிஎல் ஆடப் போவதாக அறிவித்தார்.

- Advertisement -

இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில் திரும்பவும் காயத்துடனே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். இதனால் இந்த ஆண்டு தோனி விளையாடிய கடைசி ஐபிஎல் என்றும் அடுத்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படும் நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து தோனி விரிவாக கூறும்போது “என்னுடைய ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இந்த முறை எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளிக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே இப்போது பந்து நமது கோர்ட்டில் இல்லை. எனவே உரிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நான் எனது முடிவை அறிவிக்கப் போகிறேன். ஆனால் அது நிச்சயம் அணியின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வேன்” என்று தோனி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:என் டீம்ல இந்த 2 பேர்தான் எனக்கு பிரச்சனை தருவாங்க.. வரட்டும் பாத்துக்கலாம் – ரோகித் சர்மா பேட்டி

அணியின் நலன் கருதி விளையாடுவது குறித்து முடிவெடுப்பேன் என்று தோனி கூறியது சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த முறை பிசிசிஐ ஐந்து முதல் ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளித்தால், அடுத்த ஆண்டு மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக இன்னொரு முறை விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by

Recent Posts