தோனிகிட்ட ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் இருக்கு; ஆனா அது சாதாரணமானது இல்லை – ஷேன் வாட்சன் பிரமிப்பு!

0
1182
Watson

இந்திய கிரிக்கெட் வாரியம் 16வது ஆண்டாக நடத்தி வரும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சேன் வாட்சன் மிகவும் முக்கியமான வீரர்!

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்ற பொழுது பேட்டிங்கில் 472 ரன்களும் பந்து வீச்சில் 17 விக்கெட்களும் வீழ்த்தி சிறப்பான செயல்பாட்டோடு ஐபிஎல் தொடரை ஆரம்பித்தார்!

- Advertisement -

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு மொத்தமாக ஓய்வு பெற்றுக் கொண்டார். இவரின் இடத்தில்தான் ருத்ராஜ் வந்து இன்று அணியின் அடுத்த கேப்டன் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

நேற்று முன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான சென்னை அணியின் போட்டியில் இலக்கை துரத்திய பொழுது கடைசியில் வழக்கம்போல் மகேந்திர சிங் தோனி ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று ஒரு கட்டத்தில் அணி வெற்றி பெறும் நிலைக்கு வைத்தார். ஆனால் கடைசி மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் அடிக்க முடியாததால் அணி தோல்வியை தழுவியது.

தற்பொழுது தனது ஐபிஎல் கடைசி கேப்டனான மகேந்திர சிங் தோனி கொடுத்து சேன் வாட்சன் பேசும் பொழுது
” தோனியின் விளையாட்டுத் திறமைகள் உச்சத்தில் இருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்கள் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பந்து பேட்டின் மத்தியில் படாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அபாரமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“தோனியைப் பற்றி எனக்கு எப்பொழுதும் தனித்து நிற்கும் விஷயம் என்னவென்றால், அவர் ரன்களை துரத்தும் பொழுது வித்தியாசமான கண்ணோட்டம் கொண்டவர். இது சாதாரணமானது அல்ல. ஆனால் இதுதான் அவரை மிகவும் சிறப்பானவராக மாற்றியது. ஆட்டம் எவ்வளவு ஆழமாக செல்கிறதோ அவ்வளவு ஆழமாக செல்ல வேண்டும் என்பதுதான் அவரது பாணி. கடைசியில் பந்துவீச்சாளர் அழுத்தத்தில் இருப்பார் அப்பொழுது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய எண்ணம். இதன் பொருள் என்னவென்றால் இப்படியான நேரத்தில் நாம் அமைதியாக இருந்தால் அந்த நேரத்தில் அந்தப் போட்டியில் நம்மால் வெல்ல முடியும்!” என்று கூறியிருக்கிறார்.