நாங்க ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்க பட்டிருக்கோம்.. சூர்யா டீம் நிச்சயம் இதுக்காக பெருமைப்படலாம் – சான்ட்னர் பேச்சு

0
6
Santner

நேற்று டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் நியூசிலாந்து அணி 96 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசியிருக்கிறார்.

நியூசிலாந்த அணி ஏற்கனவே வென்றிருக்கும் இரண்டு ஐசிசி தொடர்களிலும் இந்திய அணியே இறுதிப்போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறையும் நியூசிலாந்து அணி கடுமையான சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி ஒரு தலைப்பட்சமாக நடந்து முடிந்து இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது.

- Advertisement -

நான் பெருமைப்படுகிறேன்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள மிச்சல் சான்ட்னர் கூறும் பொழுது “நாங்கள் இந்த அளவிற்கு வந்ததற்கு எங்கள் வீரர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இந்த தொடர் முழுக்கவே எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. நாங்கள் அதை சமாளித்து நல்ல ஆட்டம் ஆடினோம். இன்று இரவு ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால், மிகவும் சிறந்த ஒரு அணியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இருந்தாலும் எங்கள் வீரர்கள் பற்றி பெருமைப்படுகிறேன்”

“இந்தியாவில் நாங்கள் விளையாடும் போட்டிகளில் எங்களுக்கு பெரும்பாலும் நல்ல ஆதரவு கிடைக்கும். ஆனால் இன்று அதிகம் நீல நிற ஜெர்சிகள் இருந்தது. நாங்கள் ஹோம் டீம் கிடையாது என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்தியா இப்படிப்பட்ட ஒரு தொடரை சொந்த மண்ணில் விளையாட எப்பொழுதும் பெரிய அழுத்தத்துடன் வரும். எனவே கேப்டன் சூரியகுமாரும் அவரது அணியினரும் இந்த வெற்றி குறித்து பெருமைப்படலாம்”

- Advertisement -

சவால்கள் இருந்தது

“இந்த தொடர் முழுக்க நான் முன்பே சொன்னது போல எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு தருணத்திலும் ஒரு வீரர் யாராவது வந்து மிகச் சிறப்பாக விளையாடி எங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்”

“நாங்கள் பல கட்டத்தில் சவால்களை சந்தித்தாலும் இரண்டாவது சுற்றில் சிறப்பாக விளையாடி செமி பைனலுக்கு வந்தோம். அங்கும் நாங்கள் சிறந்த போட்டியை வெளிப்படுத்தினோம். ஆனால் இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இருந்த போதும் எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்து நான் பெருமைப்படுகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -