“தோனி பாய் ரெண்டே விஷயம்தான் சொன்னாரு.. என் வாழ்க்கையே மாறிடுச்சு” – துருவ் ஜுரல் பேட்டி

0
34
Jurel

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி இருக்கிறது. தற்பொழுது முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் அணியை அறிவித்திருக்கிறது. இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக இடம் பெறவில்லை.

- Advertisement -

மேலும் இந்த அணியில் இன்னொரு முக்கிய முடிவாக ஓய்வு கேட்டு வாங்கி சென்று இருந்த இஷான் கிஷானை தேர்வுக்குழு பரிசீலிக்காமல் புறக்கணித்தது. இது அவருடைய கிரிக்கெட் வாழ்வுக்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் இசான் கிஷான் இடத்திற்கு 22 வயதான வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் உத்தரபிரதேசத்தை சேர்ந்த துருவ் ஜுரல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

கடந்த முறை ஐபிஎல் தொடரில் முதல்முறையாக இம்பேக்ட் பிளேயர் எனும் விதி கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக எல்லா அணியிலும் ஒரு இந்திய வீரர் அதிகமாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வாய்ப்பை ஜூரல் பெற்றார்.

- Advertisement -

அவருடைய முதல் போட்டி அவருடைய ஆதர்சன கதாநாயகனான மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அமைந்தது. அந்தப் போட்டியில் அவர் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் அடுத்த அடுத்த போட்டிகளில் இம்பேக்ட் பிளேயர் என்பதை தாண்டி, பிளேயிங் லெவனில் நேரடியாக இடம் பெற்றார்.

இதற்குப் பிறகு அவருடைய வளர்ச்சி இந்திய ஏ அணிக்கு இருந்தது. அங்கிருந்து நேராக இஷான் கிஷான் இடத்தில் அதிரடியாக விளையாடும் துருவ் ஜுரல் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தன்னுடைய ஐடியல் மகேந்திர சிங் தோனியை பற்றி பேசியுள்ள துருவ் ஜுரல் கூறும்பொழுது “அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தக்கூடிய ஒருவர். கடந்த 18- 20 ஆண்டுகளாக அவர் உண்டாக்கி இருக்கும் ஒளி பெரியது. யாராலும் அதை தொட முடியாது. நான் அவரைப்போல இருக்க விரும்புகிறேன். ஆனால் நூறு சதம் இல்லை ஐந்து சதவீதம் இருந்தாலே போதும்.

இதையும் படிங்க : “விளையாடும் முன்னவே தவறு செஞ்சுட்டிங்க ஸ்டோக்ஸ்.. இப்படி பண்ணி இருக்கக்கூடாது” – நாசர் ஹூசைன் கருத்து

நான் முதலில் அவரை சந்தித்த பொழுது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் எதிரில் இருப்பதே எனக்கு தெரியவில்லை. நான் இது கனவா என்று கிள்ளிப் பார்த்து கொண்டேன்.

அப்பொழுது அவர் எனக்கு அமைதியாக இருக்கவும் பந்தை நேராக அடிக்கவும் இரண்டே அறிவுரை மட்டும் கூறினார். நான் இதை பேட்டிங் செய்யும்பொழுது பயன்படுத்தினேன். இது எனக்கு ரொம்ப நல்ல பலன் அளித்தது. இது பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். ஆனால் அவர் இதை வைத்துதான் இவ்வளவும் செய்து இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.