“தோனியும் நானும் சிறந்த நண்பர்களாக இருந்ததில்லை.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!” – யுவராஜ் சிங் பரபரப்பான பேச்சு!

0
599
Dhoni

இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான வெற்றிகளில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரிய பங்கு இருக்கிறது. அதேபோல் கேப்டனாக மகேந்திர சிங் தோனி பெற்றுள்ள வெற்றிகளுக்கு பின்னால் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு இருக்கிறது!

மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு என இரண்டு உலகக் கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றிய பொழுது, அந்தத் தொடர்களில் இந்திய அணிக்கு எல்லா வகையிலும் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் யுவராஜ் சிங்.

- Advertisement -

மேலும் அடுத்த கேப்டனாக வருவதற்கு சேவாக் மற்றும் யுவராஜ் சிங் வரிசையில் இருந்த பொழுது, சச்சின் உடைய சிபாரிசின் படி மகேந்திர சிங் தோனி கேப்டனாக கொண்டுவரப்பட்டார். தோனி யுவராஜ் சிங்கை விட நான்கு வருடங்கள் இந்திய அணியில் விளையாடியதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் இருவருக்குமான நட்பு எப்படியானது என்பது குறித்து இன்று பேசி உள்ள யுவராஜ் சிங் கூறியிருக்கும் பொழுது, நாங்கள் என்றுமே நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை என்று அதிர்ச்சியான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” அரசியல் ரீதியாக நான் சரியாக இருக்க வேண்டுமா அல்லது நேர்மையாக இருக்க வேண்டுமா என்றால் நான் சரியாக இருந்தேன். மகேந்திர சிங் தோனி இடம் கேட்டாலும் அவர் இதையேதான் கூறுவார்.

- Advertisement -

நாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்தது கிடையாது. ஏனென்றால் அவருடைய வாழ்க்கை முறையில் இருந்து என்னுடைய வாழ்க்கை முறை மிகவும் வேறுபட்டதாக இருந்தது. நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம் ஆனால் இப்படி விளையாடியதன் காரணமாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தது கிடையாது.

நானும் தோனியும் மைதானத்திற்கு சென்ற பொழுது நூறு சதவீதத்திற்கும் மேல் கொடுத்தோம். அவர் கேப்டனாகவும் நான் துணை கேப்டனாகவும் இருந்தேன். அவர் அணிக்குள் வந்த பொழுது என்னைவிட நான்கு வருடம் இளையவராக இருந்தார்.

கேப்டனுக்கும் துணை கேப்டனுக்கும் ஆன முடிவுகளில் சில மாறுபாடுகள் இருக்கும். சில நேரங்களில் எனக்குப் பிடிக்காத முடிவுகளை அவர் எடுத்தார். சில நேரங்களில் அவருக்கு பிடிக்காத முடிவுகளை நான் எடுத்தேன். இது எல்லா அணிகளிலும் இருக்கக்கூடியதுதான்.

எனது கேரியரின் முடிவின்பொழுது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு தெளிவான பிக்சர் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் நான் அவரிடம் சென்று இது குறித்து கேட்டேன். அப்பொழுது அவர் தேர்வுக்குழு என்னை விரும்பவில்லை என்பதாக கூறினார். குறைந்தபட்சம் அவர் ஒருவராவது என்னிடம் இந்த விஷயத்தில் உண்மையாக இருந்ததற்கு நான் நன்றி சொன்னேன்!” என்று கூறியிருக்கிறார்!