மும்பை அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா படைத்த சாதனையை முறியடித்துள்ள ஷிக்கர் தவான்

0
93
Shikhar Dhawan and Suresh Raina

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 70 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரராக ஷிகர் தவான்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக இதுநாள் வரையில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்து வந்தார். 36 போட்டிகளில் விளையாடி 850 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக என்று தன்னுடைய 27* போட்டியில் ஷிகர் தவான் விளையாடி கொண்டிருக்கிறார். இன்று 70 ரன்கள் குவித்த பின்னர், ஷிகர் தவான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மொத்தமாக 871 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரராக ஷிக்கர் தவான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல் :

ஷிகர் தவன் – 871 ரன்கள்

- Advertisement -

சுரேஷ் ரெய்னா – 850 ரன்கள்

விராட் கோலி – 827 ரன்கள்

ஏபி டிவிலியர்ஸ் – 785 ரன்கள்

எம்எஸ் தோனி – 739 ரன்கள்

முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியன்ஸ் அணி ?

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி முதல் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது போராடி வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தன் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி ருசி பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.