கிரிக்கெட்

டெல்லியில் டாஸ் வென்றால் என்ன செய்யனும்?  இந்தியா கடைசியாக இங்கு விளையாடிய போது என்ன நடந்தது?

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் இந்தியா கடந்த 36 ஆம் ஆண்டுகளாக தோல்வியை தழுவியது இல்லை.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி செல்ல வேண்டுமென்றால் மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கணத்தில் வெற்றி பெற வேண்டும். தற்போது முதல் டெஸ்ட்டில் வென்ற இந்தியா இன்னும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வென்று ஆக வேண்டும்.

இதனால் டெல்லி டெஸ்டில் இந்திய அணி சந்தித்தால் கூட அது தோல்வி என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் தொடரை வெல்வதை விட இந்திய அணி மேலே சொன்னது போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலையில் டெல்லி மைதானத்தில் இந்திய அணி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆடுகளம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடைசியாக இந்தியா இங்கு விளையாடும் போது என்ன நடந்தது என்று தெரிந்தால், இந்த டெஸ்டில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது உதவியாக இருக்கும்.

இந்தியா இலங்கை அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் கடந்த 2017ஆம் ஆண்டு மோதியது. அப்போது டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் ஏழு விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்தது. இதில் முரளி விஜய் 155 ரன்கள், விராட் கோலி 243 ரன்கள் குவித்தனர். முதல் நாள் மட்டும் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு  371 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனை அடுத்து இலங்கை தன்னுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கி 373 ரன்களில் சுருண்டது. அஸ்வின்,  இஷாந்த் சர்மா தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி அரை சதமடித்தனர். இதனை அடுத்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய இலங்கை அணி ஐந்தாவது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆட்டம் சமனில் முடிந்தது. டெல்லி ஆடுகளத்தில் டாஸ் வென்று போட்டியில் முதலில் பேட் செய்த அணிகள் ஆறுமுறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 13 முறையும் டெஸ்ட் போட்டியில் வென்று இருப்பது. குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by

Recent Posts