32 பந்து 35 ரன்.. ஸ்பின்னில் தடுமாறிய ரிஷப் பண்ட்.. கடைசியில் பந்து வீசிய ஆச்சரியம்.. டெல்லி பிரிமியர் லீக் 2024

0
295
Rishabh

ஐபிஎல் தொடரின் வெற்றியால் இந்தியாவில் மாநில கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக்குகளை நடத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்த வகையில் முதல் முறையாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை துவங்கி இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் சமூக வலைதளத்தில் சர்ச்சையாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது.

நேற்றைய முதல் போட்டிக்கான டாசில் வென்ற சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த புரணி டெல்லி 6 அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அர்பித் ராணா 41 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். மஞ்சித் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் விளையாட வந்தார். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக அவர் மிகவும் தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். 32 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் மொத்தம் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதற்கு அடுத்து வந்த லலித் யாதவ் 21 பந்தில் 34 ரன்கள், வன்ஸ் பேடி அதிரடியாக 19 பந்தில் 47 ரன்கள் என இருவரும் ஆட்டம் இழக்காமல் ரன்கள் எடுக்க, புரணி டெல்லி 6 அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு197 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 30 பந்தில் 57 ரன்கள், சர்தாக் ராய் 26 பந்தில் 47 ரன்கள் எடுத்து நல்ல வலிமையான துவக்கத்தை கொடுத்தார்கள்.

மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ஆயுஸ் பதோனி அவர் பங்குக்கு மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அங்கிருந்து சில விக்கெட்டுகளை அந்த அணி மிக வேகமாக இழந்தது. இறந்தபோதிலும் 19 ஓவர்களில் இலக்கை சமன் செய்து விட்டது.

இதையும் படிங்க : ரிங்கு சிங் ஹர்திக் பாண்டியா கலவை.. 2 வருஷமா ஆர்சிபி இந்த பையன வீண் அடிச்சிருச்சு – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

இந்த நிலையில் 20வது ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ரிஷப் பண்ட் பந்து வீச வந்தார். அவர் வீசிய ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புரணி டெல்லி 6 அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வீச்சுக்கு எதிராக மிகவும் மந்தமாக தடுமாறி பேட்டிங் செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. தற்போது இது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்!

- Advertisement -