128 டெசிபல்.. 231 ஸ்ட்ரைக் ரேட்.. அதிரவிட்ட வின்டேஜ் தோனி.. சிஎஸ்கேவை வீழ்த்தி டெல்லி வெற்றி

0
554
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.

டெல்லி அணிக்கு துவக்க ஜோடியாக வந்த டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவிஷா இருவரும் 93 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் தந்தார்கள். டேவிட் வார்னர் 52, பிரித்திவிஷா 43 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்து வெளியேறினார்கள். இதற்குப் பிறகு டெல்லி அணிக்கு மிட்சல் மார்ஸ் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த போட்டியில் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் மதிஷா பதிரனா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் ருதுராஜ் 1, சச்சின் ரவீந்தரா 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். இதைத்தொடர்ந்து ரகானே 45, டேரில் மிட்சல் 34, சிவம் துபே 18, சமீர் ரிஸ்வி 0 என அடுத்தடுத்து வெளியேற, மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வந்தார். அவர் வந்த பொழுது ரசிகர்களின் ஆரவாரம் 128 டெசிபல் இருந்தது.

கடைசிக் கட்டத்தில் ரசிகர்களை ஏமாற்றாமல், தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்தார். தோனியின் ஒவ்வொரு அடிக்கும் அரங்கம் அதிர்ந்தது. அடுத்து ரவீந்திரஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : சமீர் ரிஸ்விக்கு முதல் பந்தே.. கேப்டன் ரிஷப் பண்ட் போட்ட மாஸ்டர் பிளான்.. வேற மாதிரி ரகம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தரப்பில் கலீல் அகமத் 2, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். மூன்றாவது போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு இது முதல் தோல்வியாகும். மூன்றாவது போட்டியில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இன்று சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தாலும் தோனி களத்திற்கு வந்து அதிரடியாக விளையாடியது, அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது.