ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் துணை கேப்டன் பாப் டு பிளசிஸ் வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. 240 ரன்கள் வரை வந்திருக்க வேண்டிய இலக்கு மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் மெதுவான ஆட்டத்தால் இறுதியில் பேட்டிங் வரிசை மந்தமானது. லக்னோ அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் அவுட் ஆகி வெளியேறியது ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த அணியை பொறுத்தவரை பூரன் அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்த போது, இந்த போட்டியில் டெல்லி அணி தோற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தனர். 65 ரண்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது அசிட்டோஸ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் டெல்லி அணியை மீட்டெடுத்தனர். அதிரடியாக ஆடிய விப்ராஜ் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 39 ரன்கள், போட்டியின் இறுதி வரை நின்ற அசிடோஸ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் என டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்கள். இந்த சூழ்நிலையில் துணை கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் இந்த போட்டியில் தோற்று விடுவோம் என்று நினைத்ததாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” புதிய விதி பற்றி கூறும் போது, ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய விதியான இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து புகார் செய்வார்கள். இந்த புதிய விதியின் மூலமாக யாராவது போட்டி முடிந்துவிட்டது என்று நினைத்தால், யாராவது வந்து அதிரடியாக விளையாடி மீண்டும் உயிர் கொடுப்பார்கள். நான் இன்னும் இதனை மசாலா டீ குடித்து அனுபவிப்பேன். நாங்கள் 5 விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய போது ஆடுகளத்தைப் பார்த்தால் நாங்கள் தோற்று விடுவோம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் பழைய மூளை என்னிடம் சொன்னது ஒரு போதும் வெளியேற மாட்டீர்கள் கூடுதல் பேட்டர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கூறியது.
இதையும் படிங்க:நான் செஞ்ச அந்த தப்புக்கு.. மக்கள் என்னை இனி குறை கூற முடியாது – டெல்லி கேப்டன் அக்சார் பேட்டி
ஒரு வெளிநாட்டு வீரராக, இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தேன். அந்த இரண்டு வீரர்களும் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டில் அற்புதமாக இருந்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 438 ரன்கள் இலக்கை துரத்திய போது மக்காயா நிதினி ஒரு ரன் எப்படி எடுத்தாரோ, மோஹித் சர்மா ஒரு ரன் எடுத்தபோது அதுதான் நினைவூட்டியது. அவருக்கு தன் வாழ்க்கையில் பெற்ற முக்கியமான சிங்கிள் அதுதான். ஏலத்தைப் பொறுத்தவரை நிறைய மாற்றங்கள் இருக்கும். சென்னையிலிருந்து பெங்களூரு அணிக்கு மாறியது புதிய அத்தியாயம். இது புத்தகத்தின் கடைசி அத்தியாயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.






