18.1 ஓவர்.. லக்னோ அணியின் பெருமை வரலாறை உடைத்து டெல்லி வெற்றி.. மெக்கர்க் ரிஷப் பண்ட் அதிரடி

0
657
DC

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணியின் முக்கியமான சாதனை ஒன்றை உடைத்து டெல்லி அணி அபாரவெற்றி பெற்றிருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணிக்கு ஓபனர்ஸ் குயின்டன் டி காக் 19 (13), கேப்டன் கேஎல்.ராகுல் 39 (22) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து வந்த லக்னோ பேட்ஸ்மேன்கள் படிக்கல் 3 (6), ஸ்டாய்னிஸ் 8 (10), பூரன் 0 (1), தீபக் ஹூடா 10 (13), க்ருனால் பாண்டியா 3 (4) ரன்கள் என வரிசையாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதனால் லக்னோ அணி ஏழு விக்கெட்டுகளை 94 ரன்களுக்கு இழந்து நெருக்கடியில் சிக்கியது

இந்த நிலையில் ஆயுஷ் பதோனி மற்றும் பந்துவீச்சாளர் அர்ஷத் கான் இருவரும் இணைந்து ஆட்டம் இழக்காமல் எட்டாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். ஆயுஷ் பதோனி 55* (35), அர்ஷத் கான் 20* (16) ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட் டெல்லி தரப்பில் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 8 (9), பிரிதிவி ஷா 32 (22) ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து இன்றைய போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலியாவின் பிரேசர் மெக்கர்க் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி, 46 பந்துகளில் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பிரேசர் மெக்கர்க் அறிமுகப் போட்டியில் 35 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 94/7 சரிந்த லக்னோ அணி.. பதோனி அர்ஷத் கான் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் 2வது அட்டகாசமான சாதனை

இவர்களுக்கு அடுத்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 24 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் 15* (9), ஷாய் ஹோப் 11* (10) ரன்கள் எடுக்க, 18.1 ஓவரில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது. லக்னோ அணி ஐபிஎல் தொடரில் 160 ரன்கள் எடுத்து இதுவரை தோற்றதில்லை என்கின்ற சாதனையை டெல்லி இன்று உடைத்திருக்கிறது.