இந்திய கிரிக்கெட்

என்ன நடந்துச்சுனு தெரியவே இல்லை.. திரும்பிப் பார்த்தா ஆர் சி பி முடிச்சு விட்டுட்டாங்க – அக்சர் படேல் வருத்தம்

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 75 ரன்கள் சுருட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி பெற்றது. இந்த படுதோல்வி குறித்து டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் மைதானத்தில் வைத்து டெல்லி ஆர்சிபி அணியை ஏற்கனவே வென்று இருந்தது. எனவே அதற்கு பதிலடி கொடுக்க ஆர்சிபி டெல்லி வந்து இருந்தது.

சுருண்ட டெல்லி

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அடுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 152 ரன் எடுத்திருந்த கேஎல் ராகுல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அந்த அணி பவர் பிளேவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இதைத்தொடர்ந்து அபிஷேக் போரல் 33 பந்துகள் சந்தித்து 30 ரன்கள் எடுத்தார். இறுதியாக அந்த அணி 75 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஹேசில்வுட் 4, புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்கள். அடுத்து விளையாடிய ஆர்சிபி எளிதாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

என்ன நடந்தது என்று தெரியவில்லை

இது குறித்து கேப்டன் அக்சர் படேல் பேசும்போது ” உண்மையைச் சொன்னால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதனால்தான் கிரிக்கெட்டில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கு முந்தைய போட்டிகளில் ஒரு கேட்ச் பிடித்திருந்தாலோ, ஒரு ரன் எடுத்திருந்தாலோ பஞ்சாப் மற்றும் குஜராத்துக்கு எதிராக வெற்றி பெற்று இருக்க முடியும். கிரிக்கெட்டில் இப்படி இருந்திருந்தால் அப்படி இருந்திருந்தால் என்று நினைப்பது முடிந்து போன விஷயம்”

இதையும் படிங்க : சச்சின் கிரிக்கெட் உலகின் கடவுள் என்றால் இந்த பையன் உபகடவுளா உருவெடுப்பான்.. அவ்வளவு திறமை இருக்கு – இந்திய முன்னாள் வீரர்

“ஆர்சிபி அணியில் பவுலர்கள் உலகத்தரமானவர்கள். அவர்கள் உலகில் எந்த ஆடுகளங்களிலும் பந்தை ஸ்விங் செய்யும் திறமை பெற்றவர்கள். ஆனால் எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் கொஞ்சம் தாக்குப்பிடித்து விளையாடி இருந்தால், இந்த போட்டியின் முடிவு வேறு விதமாய் அமைந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by