முதல் 6 ஓவர்லயே இந்த தப்பை நாங்க செஞ்சா.. நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. அவரும் கை கொடுக்கல – அக்சார் பட்டேல்

0
109

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

டெல்லி அணி தோல்வி

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் குர்பாஸ் மற்றும் சுனில் நரேன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 2.6 ஓவர்களில் 48 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 25 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர் டு பிளசிஸ் சிறப்பாக விளையாட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்தனர். அபிஷேக் பொரேல் 4 ரன், கருண் நாயர் 15 ரன், கேஎல் ராகுல் 7 ரன் என ஆட்டம் இழந்து வெளியேற, கேப்டன் அக்சார் பட்டேல் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். டூ ப்ளஸ்சிஸ் 45 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேற, இறுதியில் டெல்லி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

ஒரே நேர்மையான விஷயம் இது தான்

தோல்விக்கான காரணம் குறித்து டெல்லி கேப்டன் கூறும் போது “ஆடுகளம் எப்படி இருந்தது நாங்கள் பவர் பிளேவில் எப்படி பந்து வீசினோம் என்று யோசித்துப் பாருங்கள். நாங்கள் இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக விட்டுக் கொடுத்தோம். நாங்கள் விளையாடும் போது சில விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக இழந்தோம். பவர் பிளே முடிந்த பிறகு நாங்கள் எப்படி அவர்களை கட்டுப்படுத்தினோம் என்பதுதான் இந்த போட்டியின் ஒரே நேர்மையான விஷயமாகும். எங்கள் சில பேட்டர்கள் தோல்வி அடைந்தாலும் 2 -3 பேட்டர்கள் சிறப்பாக விளையாடி போட்டியை நெருக்கமாக எடுத்துச் சென்றோம்.

இதையும் படிங்க:20 வயது விப்ராஜ் கலக்கல்.. ரோஹித் பொல்லார்ட் சாதனை உடைப்பு.. ஆனால் டெல்லிக்கு நடந்த சோகம்.. புள்ளி பட்டியலில் மாற்றங்கள்

விப்ராஜ் பேட்டிங் செய்தபோது நம்பிக்கை இருந்தது. அசுதோஸ் இருந்திருந்தால் முதல் போட்டியில் செய்ததைப் போல அவரால் வெற்றி பெற்று கொடுத்திருக்க முடியும். இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது பயிற்சி விக்கெட்டுகளில் விழுந்ததால் காயம் அடைந்தேன். இருப்பினும் எங்களுக்கு போதுமான இடைவெளி இருக்கிறது அதற்குள் நான் மீண்டும் வருவேன்” என்று அக்சார் பட்டேல் பேசியிருக்கிறார்.

- Advertisement -