18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாடின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி லக்னோ மோதல்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. லக்னோ அணியில் எய்டன் மார்க்ரம் மற்றும் மிச்சல் மார்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களா களம் இறங்கினார்கள். மார்க்ரம் 15 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, அவருக்கு பின்னால் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 42 பந்துகளில் 87 ரன்கள் குவித்தது. மிச்சல் மார்ஸ் 36 பந்துகளை எதிர் கொண்டு 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 72 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
பூரன் 30 பந்துகளில் 6 போர் மற்றும் 7 சிக்ஸ் என 75 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 6வது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெடுகள் கைப்பற்றினார்.
ஹீரோ ஆன அசிடோஸ் சர்மா
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. மோசின் கானுக்கு பதிலாக இறுதியில் சேர்க்கப்பட்ட சர்துல் தாகூர் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே டெல்லி தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்கை ஆட்டம் இழக்கச் செய்து வெளியேற்றினார். மூன்றாவது வரிசையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் அபிஷேக் அதே ஓவரில் வெளியேற, தாகூர் லக்னோ அணிக்கு பெரிய திருப்பமுனையை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் சமீர் ரிஸ்வி 4 ரன், ஸ்டப்ஸ் 34 ரன்னில் வெளியேற்றினார்.
இதையும் படிங்க:11.25 கோடிக்கு எடுத்தாங்க.. அப்போ அபிஷேக்கிட்ட போன் பண்ணி இதைத்தான் கேட்டேன் – இசான் கிஷான் பேட்டி
இதில் மிடில் வரிசையில் களம் இறங்கிய அசிடோஸ் சர்மா ஒரு முனையில் போராட, விப்ராஜ் நிகாம் இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த டெல்லி அணிக்கு கடைசி ஓரில் 6 ரன்கள் தேவைப்பட, சபாஷ் அகமதுவின் கடைசி ஓவர் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து அபாரமாக தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி அணியை அசிடோஸ் சர்மா வெற்றி பெற வைத்து ஹீரோ ஆனார். 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 66 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.






