டெல்லி கேப்பிடல்ஸ் அணி நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் நாளைய போட்டி குறித்து டெல்லி அணியின் ஆல் ரவுண்டர் விப்ராஜ் நிகாம் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
டெல்லி சன்ரைசர்ஸ் மோதல்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொறுத்தவரை அக்சார் பட்டேல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 209 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய அசுதோஸ் சர்மா விப்ராஜ் நிகாம் இருவரும் அதிரடியாக விளையாடி பரபரப்பான கட்டத்தில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தனர்.
மேலும் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கே எல் ராகுல் தனக்கு மகள் பிறந்துள்ள நிலையில் முதல் போட்டியை தவற விட்டதால் டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் பலமாக இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் விப்ராஜ் நிகாம் முதல் போட்டியை வைத்து எதுவும் மதிப்பிடக் கூடாது எனவும், மேலும் அணியின் முக்கிய வீரர் கேஎல் ராகுல் வருவதால் அது அணிக்கு சரியான சமநிலையை ஏற்படுத்தும் எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒரு போட்டியை வெச்சு மதிப்பிடாதீங்க
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நிச்சயமாக இப்போது எங்கள் அணியில் கேஎல் ராகுல் இணைந்துள்ளார். இது எங்கள் அனைத்து சரியான சமநிலையை கொண்டு வரும். ஒரு போட்டியை வைத்து எதுவுமே மதிப்பட முடியாது. எங்கள் வீரர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் திறமையானவர்கள். மேலும் இனி வரும் ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். மேலும் எங்கள் அணியில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் பிரச்சனை எதுவும் இல்லை.
இதையும் படிங்க:ஒரு மேட்ச் தோத்தா பரவால்ல.. தோனி இதுக்குதான் விட்டு கொடுத்தார்.. பவுலர்ஸ் எச்சரிக்கையா இருங்க – முகமது கைஃப்
கடந்த போட்டி ஒரு அழுத்தமான ஆட்டமாக இருந்தது. சில நல்ல பந்து வீச்சுக்களால் சில மோசமான ஷாட்களும் நிகழ்ந்தது. எனவே இது ஒரு ஆட்டத்தில் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். எனவே செய்ததை அனைத்தையும் மறந்து விட்டு அடுத்த போட்டியில் எப்படி சிறப்பாக முன்னேறுவோம் என்பதே இப்போது இருக்கக்கூடிய ஒரு மனநிலை” என்று விப்ராஜ் நிகாம் கூறி இருக்கிறார். நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஹைதராபாத் அணியும் தங்களது இரண்டாவது ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது