முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க கூடாது – ஆஷிஷ் நெக்ரா கருத்து!

0
256

“முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் எடுத்திருக்க கூடாது” என ஆஷிஷ் நெக்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை முடிந்த பிறகு நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இரண்டு அணியிலும் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

துரதிஷ்டவசமாக, டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு பல விமர்சனங்களையும் பெற்று தந்தது.

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் இவரை பிளேயிங் லெவனில் எடுத்தார். சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடி 38 ரன்களையும் அடித்தார். ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவருக்கு மீண்டும் இடம் கொடுக்கப்படாமல் வெளியில் அமர்த்தப்பட்டு, தீபக் ஹூடா உள்ள எடுத்துவரப்பட்டிருக்கிறார். கூடுதல் பந்துவீச்சு தேவை என்று காரணம் கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெக்ரா தனது கருத்தை முன் வைத்திருக்கிறார். “சாம்சன் முதல் போட்டியில் எடுத்து வந்ததே தவறு. தீபக் ஹூடா விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் ஆறாவது பந்துவீச்சாளராக ஹூடா இருந்திருப்பார்.

- Advertisement -

நியூசிலாந்து மைதானத்தில் அவருக்கு நன்றாக பந்துவீச்சு எடுபடுகிறது. டி20 போட்டிகளிலும் அதை நாம் பார்த்தோம். எதற்காக முதல் போட்டியில் சஞ்சு சாம்சனை உள்ளே எடுத்து வந்தீர்கள்? தற்போது எதற்காக இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தி விட்டீர்கள்? ஒரு போட்டியில் மட்டும் விளையாட வைத்தால் அது எப்படி அந்த குறிப்பிட்ட வீரருக்கு நியாயம் சேர்ப்பதாக இருக்கும். இது முற்றிலும் தவறான முடிவு.

எனது தனிப்பட்ட கருத்து, இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடுதல் பந்துவீச்சு இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது. ஆகையால் இரண்டு போட்டிகளிலும் தீபக் ஹூடா விளையாடி இருக்க வேண்டும்.” என ஆஷிஷ் நெக்ரா கூறியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.