கடைசி ஓவர் வரை போராடி முதல் வெற்றியை பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

0
438

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை போராடி வென்று இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த சீசனின் 28ஆவது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் 43 ரன்கள் அடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரசல் 38 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதளவில் சோபிக்கவில்லை

இதனால் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் அடித்தது கொல்கத்தா அணி. கடைசி ஓவரில் ரசல் 3 சிக்ஸர்களை அடிக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய ஸ்கோர் வந்திருக்காது. இருப்பினும் இந்த ஸ்கோர் பத்தாது என்ற கணிப்புகளும் நிலவியது.

இலக்கை சேஸ் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி துவங்கிய விதம் சிறப்பாக இருந்ததால் போட்டியை விரைவாக முடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஓவர்களில் கொல்கத்தாவின் பவுலர்கள் உள்ளே வந்து மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் நித்திஷ் ரானா பவுலிங் பொறுப்பை எடுத்துக்கொண்டு நன்றாக கட்டுப்படுத்தி விக்கெடுக்களையும் வீழ்த்தினார். இந்த போட்டியிலும் நன்றாக ஆரம்பித்த டேவிட் வார்னர் 11 பவுண்டரிகள் அடித்து 57 ரன்களுக்கு அவுட் ஆனார்.

மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே 21 ரன்கள் அடித்தார். கிட்டத்தட்ட இலக்கை நெருங்கும் தருவாயில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்த டெல்லி அணி அவர்களாகவே அழுத்தம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் இறுதிவரை களத்தில் நின்ற அக்சர் பட்டேல் நிதானமாக கடைசி ஓவர் வரை போராடி 19 ரன்கள் அடித்து, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி, டெல்லி அணி இந்த சீசனின் முதல் வெற்றியை பெறுவதற்கு உதவினார். இறுதியாக டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் அடித்தது. இதன் மூலம் நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.