இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்டின் பேராசை.. கோயங்காவுக்கு நடந்த சோகம்.. சிஎஸ்கே கண்டெடுத்த வீரர் மாஸ் பேட்டிங் – லக்னாவை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கடந்த முறை சிறப்பாக விளையாடிய தொடக்க ஜோடி மாற்றப்பட்டு மிட்சல் மார்ஸ் உடன் கேப்டன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக வந்தார்.

சரிந்த பேட்டிங் யூனிட்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் 7, மிட்சல் மார்ஸ் 35, மார்க்ரம் 11, ஆயுஸ் பதோனி 0, நிக்கோலஸ் பூரன் 8, அப்துல் சமாத் 36, முகுல் சவுத்ரி 14, சபாஷ் அகமத் 15 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 141 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. லுங்கி நெகிடி மற்றும் நடராஜன் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

கடந்த ஐபிஎல் சீசனில் மிச்சல் மார்க்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் சிறப்பாக துவக்க இடத்தில் வந்து விளையாடினார்கள். ஆனால் கடந்த சீசனில் தடுமாறிய ரிஷப் பண்ட் தான் திரும்பி வருவதற்காக தொடக்க இடத்தை இந்த முறை எடுத்துக் கொண்டார். ஆனால் அவரால் சரளமாக விளையாட முடியவில்லை. அவரது இந்த ஆசை அந்த அணிக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.

- Advertisement -

சிஎஸ்கே கண்டெடுத்த வீரர்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அனுப்பி கேஎல்.ராகுல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். தொடர்ந்து நிசாங்கா 1, நிதிஷ் ராணா 15, அக்சர் படேல் 0 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். டெல்லி கேப்பிட்டல் 24 ரன்னில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

இதையும் படிங்க : இந்த தமிழ்நாட்டு பையன் குஜராத் டீம்ல எதுவுமே பண்ணல.. சீக்கிரம் தூக்கிட வேண்டியதுதான் – அம்பதி ராயுடு பேச்சு

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய சிஎஸ்கே கடந்த முறை கண்டெடுத்த சமீர் ரிஸ்வி மிகச் சிறப்பாக விளையாடி 47 பந்தில் 70 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்தில் 39 ரன் ஆட்டம் இழக்காமல் எடுக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சரிவில் இருந்து மீண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -
Published by