இந்த தமிழ்நாட்டு பையன் குஜராத் டீம்ல எதுவுமே பண்ணல.. சீக்கிரம் தூக்கிட வேண்டியதுதான் – அம்பதி ராயுடு பேச்சு

0
7
Ambati

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தமிழ்நாட்டு வீரர் ஷாருக் கான் விளையாடுகிறார். இவர் தொடர்ந்து எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை என அம்பதி ராயுடு விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக நான்கு கோடி ரூபாய்க்கு அன் கேப்ட் வீரர்கள் பட்டியலில் குஜராத் இவரை தக்க வைத்தது. வெளியில் ஏலத்திற்கு வந்திருந்தால் இன்னும் நிறைய பணம் கிடைத்திருக்கும். ஆனால் இவர் வர விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பஞ்சாபில் ஆரம்பித்த பயணம்

இவர் அன் கேப்ட்டு வீரராக ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணியால் ஒன்பது கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கப்பட்டார். அந்த அணியில் இவர் இருந்த வரையில் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்த அணியாலே மறுபடியும் தெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்.

இந்த நிலையில் இவர் தொடர்ந்து ஏமாற்றம் அளித்த காரணத்தினால் இவரை பஞ்சாப் அணி வாங்கவில்லை. இதைத்தொடர்ந்து குஜராத் அணி இவரை வாங்கி பினிஷர் ஆக உருவாக்க திட்டமிட்டது. ஆனால் நேற்றைய போட்டி வரையில் இவர் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை.

- Advertisement -

இவருக்கு கடமை இருக்கிறது

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “கடந்த சில சீசன்களாகவே ஷாருக் கான் பற்றிய எதிர்பார்ப்பு குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப அவருடைய பர்பாமென்ஸ் இல்லை. குஜராத் அணி அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளது. அதற்கு அவர் கடமைப்பட்டு இருக்கிறார்”

இதையும் படிங்க: யார் ஸார் ஆடாம பெஞ்ச்லேயே இருக்க விரும்புவாங்க?.. மும்பையை விட்டு லக்னோ வந்து நிறைய கத்துக்கிட்டேன் – அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டி

“இதனால் அவர் குறித்து குஜராத் சீக்கிரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு வர வேண்டும். அவர் கடந்த சீசனை விட முன்னேற்றம் அடைந்துள்ளாரா? அவர் புதியதாக ஏதாவது மேம்பாடு அடைந்துள்ளாரா? அவர் எதுவுமே செய்யவில்லை என்றால், அவர் இனிமேல் விளையாட வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -