டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அசுதோஷ் ஷர்மா, இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் 70 பந்துகளில் சதம் அடித்து அபாரமான தொடக்கத்தைப் பதிவு செய்தார். 26 வயதான இவர், போட்டி நடைபெறும் காலையில் இங்கிலாந்து சென்று, மே லிவர்பூல் மற்றும் டிஸ்ட்ரிக்ட் கிரிக்கெட் போட்டியில் விகன் கிரிக்கெட் கிளப்பிற்காக அறிமுகமானார்.
அவரது ஆக்கோரஷமான ஆட்டம், அணியை மோசமான தொடக்கத்தில் இருந்து மீட்டது. 2025 சீசனுக்காக ECB பிரீமியர் லீக்கில் விகன் கிளப்பிற்காக இணைந்த அசுதோஷ், ஃபார்ம்பி கிரிக்கெட் கிளப் உடனான போட்டியில் அணி 10 ஓவர்களுக்குள் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, 5-வது இடத்தில் களமிறங்கினார்.
70 பந்துகளில் சதம்:
இவர், தொடக்க வீரர் அவீன் தலுகோடாவுடன் இணைந்து 23.4 ஓவர்களில் 153 ரன்கள் கூட்டணி அமைத்தார்.
அசுதோஷ் தனது சத இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 6 இமாலய சிக்ஸர்களும் அடித்தார். கிட்டத்தட்ட 137 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர், 70 பந்துகளில் சதமடித்து, 34-வது ஓவரில் சரியாக 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டுக்கு பிறகு, விகன் அணியை 170/3 என்ற நிலையில் இருந்து 52-வது ஓவரில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக வைத்தது. எனினும் ஃபார்ம்பி இலக்கை துரத்தி வெற்றிபெற்றது. இது குறித்து பாராட்டியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் ஆலோசகர் கெவின் பீட்டர்சன், இன்று காலை தான் இங்கிலாந்து வந்தார்.
ஐபிஎலில் அசுதோஷ் செயல்பாடு:
வந்த அதே நாளில் சதம் அடித்து இருக்கிறார். திறமையான வீரர் என்று பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இதற்கிடையில், IPL 2025-ல், அசுதோஷ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 3.8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 29.14 சராசரியுடனும் 160.62 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 204 ரன்கள் குவித்தார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிராக 31 பந்துகளில் 66 ரன்கள்அடித்து, கடைசி ஓவரில் டெல்லியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது அவரது சிறந்த ஆட்டமாகும்.
இதையும் படிங்க: WTC பைனல்.. ஆஸிக்கு செக் வைக்க.. தென் ஆப்பிரிக்கா செய்த மாஸ் மூவ்.. புதிய அறிவிப்பு வெளியீடு
இருப்பினும், டெல்லி அணி பிளேஆஃப்க்கு தகுதிபெற முடியாமல், புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது. 26 வயதான அசுதோஷ், 14 லிஸ்ட் ஏ போட்டிகள், 44 டி20 போட்டிகள், மற்றும் 8 முதல்-தர போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 123 ஆகும்.






