ஐபிஎல் சட்ட விதிமுறையை மீறியதற்காக ரிஷப் பண்ட், தாகூர் & துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரேவுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ள பிசிசிஐ

0
127
Rishabh Pant and Shardul Thakur fined

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்று ஆட்டத்தின் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ராஜஸ்தான் அணியை சேர்ந்த மெக்காய் வீசினார். முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட போவெல் 3 சிக்சர்கள் அடித்தார். அந்த ஓவரின் 3-வது பந்து இடுப்புப் பகுதிக்கு மேலே சற்று வீசப்பட்டது. அடிப்படையில் இடுப்பு பகுதிக்கு மேல் வீசப்படும் பந்து நோ பாலாக அறிவிக்கப்பட வேண்டும்.

நேற்று நடுவர்கள் ஒன்றாக ஆலோசித்து அந்த பந்து முறையான பந்து தான். போவெல் சற்று இறங்கிவிட்டார் எனவே இது ஃபுல் டாஸ் பந்து தான் என்று முடிவெடுத்து விட்டனர். அவர்கள் எடுத்த முடிவுக்கு ரிஷப் பண்ட் ஷர்துல் தாகூர் மற்றும் டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே மறுப்பு தெரிவித்தனர்.

துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே ஒரு போட்டியில் விளையாட தடை

டெல்லி அணி டக் அவுட்டில் கேப்டன் ரிஷப் பண்ட் ஷர்துல் தாகூர் மற்றும் பிரவீன் அம்ரே மூன்றாவது நடுவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு வந்த நிலையில் திடீரென பிரவீன் மைதானத்திற்குள் சென்று அங்கே கள நடுவர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டி ஒரு சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

அதேபோல டக் அவுட்டில் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் மிகக் கோபமாக காணப்பட்டனர். டக் வீட்டிலிருந்து கொண்டவாறு மிகப்பெரிய வாக்கு வாதத்தில் இவர்கள் இருவரும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் சட்டதிட்ட விதிமுறை மற்றும் கோட்பாடன் அடிப்படையில், நேற்றைய போட்டியில் வரம்புமீறி ஐபிஎல் சட்ட விதிமுறையை மீறிய காரணத்திற்காக துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரேவுக்கு நேற்றைய போட்டியின் வருவாயில் இருந்து 100 சதவீதம் அபராதமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல ஒரு போட்டியில் விளையாடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் கேப்டன் ரிஷப் பண்டிற்கு நேற்றைய போட்டியின் வருவாயில் இருந்து 100 சதவீதம் அபராதமாக (இந்திய மதிப்பில் ஒரு கோடியே 15 லட்ச ரூபாய்) எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூருக்கு நேற்றைய போட்டியின் வருவாயிலிருந்து 50 சதவீதம் அபராதமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.