இந்திய தொடர்ல அவருக்கு மட்டும் தான் குறி வச்சு இருக்கோம்.. அசந்தா முடிச்சுடுவாரு – பாட் கம்மின்ஸ் பேட்டி

0
374
Cummins

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரர் மிகவும் அச்சுறுத்தலாக தங்கள் அணிக்கு இருப்பார்கள் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணி தங்களது சொந்த நாட்டில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மிகவும் முக்கியமான தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

2019 ஆம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்பொழுது இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம் பெற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விராட் கோலி எல்லா போட்டிகளையும் விளையாடினார்.

அதே சமயத்தில் 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற பொழுது விராட் கோலி ஒரு போட்டியுடன் தனிப்பட்ட காரணங்களால் விலகிவிட்டார். அஸ்வின், ஷமி, ஜடேஜா, பும்ரா, ரோஹித் சர்மா என முன்னணி வீரர்கள் தொடரின் மத்தியில் தொடர்ந்து விலகினார்கள். ஆனால் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் பயம்

இந்திய இளம் வீரர்கள் கடைசி முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடர் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்ததால், அந்த அணியினருக்கு தற்பொழுது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நல்ல பார்மில் இல்லாத பொழுதும் கூட இந்திய அணி குறித்த அச்சம் இருக்கிறது. குறிப்பாக ரிஷப் பண்ட்டை பார்த்து பயப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நாளை முதல் டி20.. கவலை தரும் மழை வாய்ப்பு.. தோனியின் ராசியான மைதானம்.. புள்ளி விபரங்கள் பட்டியல்

இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது “ரிஷப் பண்ட் எப்பொழுதும் போட்டியை மிக விரைவாக நகர்த்தக்கூடிய வீரர். எனவே அவருக்கு எதிராக நீங்கள் நல்ல திட்டங்கள் வைத்திருக்க வேண்டும். அவர் கடைசி முறை ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடினார். எனவே இந்தத் தொடரில் எங்களுக்கு அவர் ஆபத்தானவராக இருப்பார் என்று தெரியும். அவருக்காக நாங்கள் தனிப்பட்ட முறையில் நல்ல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -