டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டபிறகு, ரிஷப் பண்ட் பற்றி பேசிய டேவிட் வார்னர்!

0
246

டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ரிஷப் பன்ட் இல்லாதது பற்றி வருத்தத்துடன் பேசி உள்ளார் டேவிட் வார்னர்.

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

அதன் பிறகு ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், குறைந்தபட்சம் 18 மாதங்கள் இவரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட முடியாது. அதன் பிறகு தான் விளையாட முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். பலரும் இவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

பின்னர் தனது உடல்நிலை எவ்வாறு தேரிவருகிறது என்பது குறித்து அவ்வபோது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் ரிஷப் பண்ட் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் நடப்பது போன்று வீடியோ வெளியிட்டிருந்தார். இது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இதற்கிடையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரிஷப் பண்ட், இந்த வருடம் ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என்பதால் புதிய கேப்டனை நியமிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் முனைப்பு காட்டியது.

- Advertisement -

2016ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை பெற்று தந்த டேவிட் வார்னர், கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஆண்டு அவரை புதிய கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்து இருக்கிறது.

இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு பேட்டி அளித்த அவர், ரிஷப் பண்ட் போன்று இளம் துடிப்பான வீரர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம். முழு உடல்நிலை குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறோம். அவரின் இடத்தை நிரப்புவது கடினம். இந்த கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மனமகிழ்வுடன் எனது முழு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். டெல்லி நிர்வாகம் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.” என்றார்.