தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறைப்பதாக டேவிட் வார்னர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுவதற்கு முன்பாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இசான் கிசானின் கோபம்
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பந்து வீசும் போது, கள நடுவர்கள் பந்தை வாங்கி பரிசோதித்து, பந்து சேதப்பட்டு இருப்பதாக அதாவது கீறல் விழுந்திருப்பதாக கூறி புதிய பந்தை இந்திய அணிக்கு கொடுத்தார்கள். இதன் காரணமாக இந்திய அணி ரிவர்ஸ் ஸ்விங் செய்வது தடுக்கப்பட்டது.
மேலும் இது மறைமுகமாக இந்திய அணியினர் பந்தை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆகவே இருந்தது. இதுகுறித்து களத்தில் இசான் கிசான் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் கள நடுவர்களின் இந்த முடிவை முட்டாள்தனம் என்று விமர்சித்தார். இதற்காக அவர் கள நடுவர்களால் எச்சரிக்கை செய்யவும் பட்டார்.
டேவிட் வார்னர் விமர்சனம் :
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டேவிட் வார்னர் பேசும் பொழுது ” தற்போது ஆஸ்திரேலியாவின் கோடை காலத்தில் இந்திய அணி இங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட வருகிறது. இந்த நிலையில் தேவையற்ற பரபரப்புகளை கூட்ட வேண்டாம் என்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்தியதை அப்படியே மூடி மறைத்து விட்டது”
இதையும் படிங்க : நியூஸி தொடர்.. இலங்கை அணிகள் அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. டி20 உலக கோப்பைக்கு மாஸ்டர் பிளான்
“களத்தில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஏதாவது நடந்தது என்று நடுவர்கள் கருதினால் அதை பின் தொடர்ந்து செல்ல வேண்டும். மேலும் வெளியில் வந்து இது சம்பந்தமாக அவர்கள் தங்களது ஆதரவு ஊழியர்களுடன் பேச வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி எதையும் நான் பார்க்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.