இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி தற்போது சூரியகுமார் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. தற்போது இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரில் விளையாட இலங்கை அணி தகுதி பெறவில்லை. எனவே இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் 2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தங்களை தயார் படுத்த வேண்டி இருக்கிறது. இதை நோக்கியே தற்பொழுது இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணிக்கு கேப்டனாக சரித் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். காயத்தின் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகிய துஷ்மந்த சமீரா, நுவான் துஷாரா, பினூரா மூன்று பேரும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் தகுதி பெறவில்லை.
அதே சமயத்தில் மூத்த வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாங்கே போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தெளிவாக 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இலங்கை கிரிக்கெட் தயாராவது தெரிகிறது.
மூத்த வீரர்களில் குசால் மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, மதிஷா தீக்ஷனா போன்றவர்கள் அணியில் தொடர்கிறார்கள். டி20 தொடரை இந்திய அணிக்கு எதிராக இழந்திருக்கும் நிலையில், வலிமையான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு எதிராக சவால் கொடுக்க இலங்கைஅணி முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சூரியகுமார் கேப்டன் ஆனதுக்கு காரணம் கம்பீர்தான்.. ஆனா பின்னணியில விஷயமே வேற – நெக்ரா பேட்டி
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி:
சரித் அசலங்கா- கேப்டன், பதும் நிஷாங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மகேஷ் தீக்ஷனா, அகில தனஞ்சய, தில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன மற்றும் அசித பெர்னாண்டோ.






