இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் மகா ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஐந்து வீரர்களை தக்க வைக்கும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
தற்போது ஐந்து வீரர்களை தக்க வைப்பதற்கான சிறந்த வீரர்களை கொண்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதே சமயத்தில் அந்த அணியில் தொடர்ந்து விளையாட ரோகித் சர்மா விரும்புவாரா? என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ரோகித் சர்மா விளையாடவில்லை என்று கூறிவிட்டாலும் கூட, அந்த அணி தக்க வைப்பதற்கு சரியான வீரராக விக்கெட் கீப்பர் துவக்க ஆட்டக்காரர், இடதுகை பேட்ஸ்மேன் இந்திய வீரர் என நான்கு பிரிவுகளில் வரக்கூடிய இசான் கிசானை அவர்களால் தக்கவைக்க முடியும்.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் ஐந்து வீரர்களை தக்க வைக்கும் அந்த ஐந்து வீரர்களும் இந்திய வீரர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் அவர்கள் நெகேல் வதேரா போன்ற, ஒரு அன் கேப்டு வீரரையும் தக்க வைக்க முடியும். இல்லையென்றால் ஆர்டிஎம் மூலமாக தங்கள் அணியில் இருந்து வேறு எந்த வீரரை கூட ஏலத்தில் போய் வாங்க முடியும்.
இந்த ஐந்து வீரர்கள் இருப்பார்கள்
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடாத அணி. ஆனால் அவர்கள் மிகவும் சிறப்பான அணி.அவர்கள் ஒரு சாம்பியன் அணி. நிச்சயம் அவர்கள் எதிர்காலத்திற்காக ஒரு அணியை உருவாக்க நினைப்பார்கள்”
“அவர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நிச்சயம் நீக்க மாட்டார்கள். மேலும் பும்ரா அணியில் தொடர்வார். மேலும் சூரிய குமார் யாதவும் அணியில் இருப்பார். இங்கு ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவாரா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது”
இதையும் படிங்க : கேரி கிரிஸ்டன் அந்த 2 வீரர்களை கேட்டார்.. உடனே கோச் பொறுப்பை விட்டு தூக்கிட்டாங்க – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்
“அதே சமயத்தில் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணிக்கு இருந்து ஒரு டி20 உலகக் கோப்பையை வென்று இருக்கிறார். எனவே அவரை அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவே பெரிய முயற்சி எடுப்பார்கள். இது தொடர்ந்து ஐந்தாவது வீரராக ஒரு வீரரை அவர்கள் தக்க வைப்பார்கள் என்றால் அது திலக் வர்மாவாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் இசான் கிசானை தக்க வைக்காது என்று தெரிய வருகிறது.






