பழைய வெஸ்ட் இண்டீஸ் தெரியுமா?.. பாகிஸ்தான் அணியின் உண்மை பிரச்சனை இதுதான் – சுனில் கவாஸ்கர் பேச்சு

0
90
Gavaskar

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சரிவுக்கு முக்கியமான காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.

தற்போது 29 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது. எனவே இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு புத்துணர்வையும் உற்சாகத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறியது பெரிய ஏமாற்றத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் திறமை

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலியின் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த பொழுது, தற்போது பாகிஸ்தான் வீரர்களிடம் என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து மிகவும் வெளிப்படையாகவும் அதே நேரத்தில் மிகவும் நாகரிகமாகவும் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” நாங்கள் விளையாடிய ஆரம்ப காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இயல்பான கிரிக்கெட் திறமைகள் இருப்பதாக கூறினோம். அவர்களுக்கு அடுத்து நாங்கள் பாகிஸ்தானை பார்க்கும்பொழுது இதே போல இயல்பான திறமைகள் கொண்ட வீரர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறினோம். பாகிஸ்தானில் இயல்பாக சிறப்பாக பந்து வீசும் திறன் கொண்ட வீரர்கள் இருந்தார்கள்”

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பிரச்சனை இதுதான்

“தற்போது பாகிஸ்தான் அணியில் நாங்கள் காணும் குறைபாடு என்னவென்றால் அது வீரர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாததுதான். இப்போதும் கூட பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் திறமைகளுக்கு எந்த வித பஞ்சமும் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நம்பிக்கை இன்மை மட்டும்தான். இதை சரி செய்தாலே போதுமானது”

இதையும் படிங்க : கில்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. ஆனா இந்த 2 டீம்தான் சாம்பியன்ஸ் டிராபிய வெல்லும் – ஹாசிம் ஆம்லா பேட்டி

“முன்பு இருந்த பாகிஸ்தான் அணியில் நாம் பார்த்த நம்பிக்கையை இப்போது பார்க்க முடியவில்லை. அப்போதைய பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் பாகிஸ்தான் வீரர்களிடம் என்னால் நம்பிக்கையை பார்க்க முடியவில்லை. அவர்கள் காலத்தில் இறங்குவதற்கு தயக்கம் கொண்டவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -