டான்சிங் ரோஸ் பிராவோ சாதனையை உடைத்து புதிய ஐபிஎல் சாதனையைப் படைத்தார் சாகல்!

0
217
Chahal

இன்று ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்புக்கான முக்கிய போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை இந்த முறை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், குர்பாஸ் இருவரும் விரைவில் விக்கட்டை இழந்தார்கள்.

இதற்கு அடுத்து வெங்கடேஷ் உடன் கேப்டன் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடி கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்திச் சென்றது.

ஆனால் இந்த முறையும் நிதிஷ் ராணாவின் விக்கட்டுக்கு சாகல் குறி வைத்தார். அவரது குறியிலிருந்து இந்த முறையும் நிதிஷ் ரானா தப்பவில்லை. ஸ்வீப் ஷாட் அடித்து ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த விக்கெட்டின் மூலம் சாகல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தினார். சிஎஸ்கே அணியின் ப்ராவோ சாதனை தகர்க்கப்பட்டு இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்;

- Advertisement -

சாகல் 184 விக்கெட்டுகள் 143 போட்டிகள்
பிராவோ 183 விக்கெட்டுகள் 161 போட்டிகள்
பியூஸ் சாவ்லா 174 விக்கெட்டுகள் 176 போட்டிகள்
அமித் மிஸ்ரா 172 விக்கெட்டுகள் 160 போட்டிகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் 171 விக்கெட்டுகள் 195 ஆட்டங்கள்
லசித் மலிங்கா 170 விக்கெட்டுகள் 122 போட்டிகள்