இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை யார் வெல்வார்கள்? யார் அதிக ரன் மற்றும் விக்கெட் கைப்பற்றுவார்கள்? என டேல் ஸ்டெய்ன் கணிப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி இன்று ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் துவங்குகிறது. ஹர்திக் பாண்டியா இல்லாததால் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடம் இந்திய அணிக்கு பிரச்சனையானதாக மாறி இருக்கிறது.
பார்த்தீவ் படேல் கருத்து
நடைபெற இருக்கும் இந்த தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்தீவ் படேல் கூறும் பொழுது ” தென் ஆப்பிரிக்க அணி பெரிய அணிதான். அவர்களும் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். ஆனால் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இப்படி நடந்தால்தான் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறேன்”
“மேலும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார் என்று நினைக்கிறேன். மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐபிஎல் முதல் நிறைய விளையாடி வரும் குல்தீப் யாதவ் இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றுவார்” என்று கூறியிருக்கிறார்.
நாங்கள்தான் வெல்வோம்
இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது ” இந்திய அணி உள்நாட்டில் விளையாடுகிறது எனவே இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று என இந்திய அணி வெல்லலாம் என்று தோன்றுகிறது. ஆனால் தற்போது டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்க அணி நல்ல வேகத்தில் இருக்கிறது. எனவே உல்டாவாக இரண்டுக்கு ஒன்று என தென் ஆப்பிரிக்க அணி இந்த தொடரை வெல்லப் போகிறது”
இதையும் படிங்க : 52 பந்து 16 சிக்ஸர்.. ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் ஷர்மா.. 8வது சதம் அடித்து சாதனை – SMAT 2025
“மேலும் எங்கள் ஒருநாள் அணிக்கு திரும்பி வந்திருக்கும் குயிண்டன் டி காக் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் அதிக விக்கெட் எடுக்கக் கூடியவராக குல்தீப் இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






