52 பந்து 16 சிக்ஸர்.. ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் ஷர்மா.. 8வது சதம் அடித்து சாதனை – SMAT 2025

0
119
Abhishek

தற்போது நடைபெற்று வரும் இந்திய உள்நாட்டு டி20 தொடர் சையத் முஸ்டாக் அலி டிராபியில் அபிஷேக் சர்மா 12 பந்தில் அரை சதம் அடித்தவுடன், 52 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடி சாதனைகள் படைத்திருக்கிறார்.

இன்று பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்ட டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெங்கால் அணியின் பௌலிங் யூனிட்டில் முகமது ஷ்மி, ஆகாஷ் தீப், ஷாபாஸ் அஹமத் போன்ற சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதிரடி தொடக்கப் பார்ட்னர்ஷிப்

இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் களம் புகுந்தார்கள். இரண்டு பேருமே ஆரம்ப முதல் அதிரடியில் பட்டையை கிளப்பினார்கள். குறிப்பாக அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் அரை சதம் அடித்து பெங்கால் அணியை மிரட்டினார். இன்னொரு முனையில் பிரப்சிம்ரன் சிங்கும் அதிரடியாக அரைசதம் அடித்தார்.

இதைத்தொடர்ந்து 33 பந்துகளில் அபிஷேக் ஷர்மா தன்னுடைய எட்டாவது டி20 சதத்தை அடித்தார். இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 35 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 12.3 ஓவர்களில் 75 பந்துகளில் 205 ரன்கள் குவிக்கப்பட்டது.

- Advertisement -

பறந்த 16 சிக்ஸர்கள்

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 52 பந்துகளை எதிர் கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்கள் உடன் 148 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்து இருக்கிறது.

இதையும் படிங்க : 30 ரன் 9 விக்கெட்.. படுமோசமாய் சுருண்ட இலங்கை.. சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணி – முத்தரப்பு டி20 தொடர்

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரராக 9 சதத்துடன் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 8 சதத்துடன் ரோகித் சர்மா இருக்கிறார். இந்தப் பட்டியலில் தற்போது 8வது டி20 சதமடித்து அபிஷேக் சர்மா ரோஹித் சர்மாவுடன் இணைந்திருக்கிறார். மேலும் t20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்தவராக மேகலாயா அணிக்கு எதிராக திலக் வர்மா 151 ரன்கள் எடுத்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மா 148 ரன் குவித்து இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறார்.

- Advertisement -