தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு லெஜெண்ட் டேல் ஸ்டெய்ன் ஆல் டைம் அழகான பவுலிங் ஆக்சன் கொண்ட பவுலர் யார் என்கின்ற கேள்வியை ரசிகர்களிடம் முன் வைத்ததோடு, அவரே ஒரு வீரரை தேர்வு செய்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் 699 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் 439 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கராக இருக்கிறார்.
டேல் ஸ்டெய்ன் தியாகம்
ப்ந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்வது, மேலும் பந்து தேய்ந்த பிறகு ரிவர்ஸ் ஸ்விங் செய்வது என ஸ்டெய்ன்மிகவும் வல்லவர். இவர் தன்னுடைய பந்துவீச்சு ஃபார்மில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இவரை எதிர்கொண்டு விளையாட எந்த பேட்ஸ்மேனும் விரும்பவில்லை.
அதே சமயத்தில் இவர் பந்தை ஸ்விங் செய்வதில் மட்டுமே திறமையானவர் கிடையாது. பந்தை 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி ஸ்விங் செய்யக்கூடியவர். இவர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் வேகத்தில் சமரசம் செய்திருந்தால் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால் இவர் வேகத்தில் சமரசம் செய்ய விரும்பாத காரணத்தினால் காயத்தால் சீக்கிரத்தில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகினார்.
அழகான ஆக்சன் கொண்ட ஆல் டைம் பவுலர்
இந்த நிலையில் ரசிகர்களிடம் ஸ்டெய்ன் கிரிக்கெட் உலகில் ஆல் டைம் அழகான பவுலிங் ஆக்சன் கொண்ட பவுலர் யார் என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்கு ரசிகர்களின் தரப்பில் இருந்து ஜாகீர் கான், கபில் தேவ், இம்ரான் கான், சேன் பான்ட், கிளன் மெக்ராத், பிரெட் லீ மற்றும் மைக்கேல் ஹோல்டிங் என பல பவுலர்களின் பெயர்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில் முதலில் தனக்கு பிடித்த அழகான ஆக்சன் கொண்ட ஆல் டைம் பவுலர் யார் என கூறுவதாக டேல் ஸ்டெய்ன் அறிவித்து தென் ஆப்பிரிக்காவில் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டை தேர்ந்தெடுத்தார்.
இதையும் படிங்க : ரிங்கு முதல் சிஎஸ்கே ரிஸ்வி வரை.. யூபி டி20 லீக் 2024.. எப்போது எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விவரம்
ஆலன் டொனால்ட் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் 1991 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை விளையாடினார். 12 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 72 டெஸ்ட் போட்டிகளில் 330 விக்கெட்டுகள், 164 ஒரு நாள் போட்டிகளில் 272 விக்கெட்டுகள் என மொத்தம் 602 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.