ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் டபுள் ஹெட்டர் நாளான இன்று, டபுள் ஹெட்டரின் இரண்டாவது போட்டியில், இன்று இரவு ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன.
தன் முதல் இரு ஆட்டங்களில் தோற்ற ஹைதராபாத் அணி பின்பு சுதாரித்து அதற்கடுத்த நான்கு ஆட்டங்களில் வென்று, புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. வில்லியம்சன், பூரன், மார்க்ரம் ஆகிய மூன்று வெளிநாட்டு பேட்ஸ்மேன்களும் பார்ம்க்கு வந்திருப்பது அந்த அணியின் பெரிய பலமாக மாறியிருக்கிறது.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பலமென்று பார்த்தால் வேகப்பந்து வீச்சுதான். அந்த அணி வேகப்பந்திற்காக இந்திய பவுலர்களான புவி, நடராஜன், உம்ரான் மாலிக் என இந்திய பந்துவீச்சாளர்களையே அதிகம் சார்ந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெயின், வருகின்ற இருபது ஓவர் போட்டி உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்த அவரது தனிப்பட்ட சில பகிர்ந்துகொண்டார்.
அதில் “புவி மற்றும் நடராஜன் மிகச்சிறப்பாகப் பந்துவீசுகிறார்கள். அவர்கள் இருவரும் ஏலத்திற்குப் பிறகு அணியில் இருப்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் இருவரும் நாங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பிய இருவர். ஏலம் பற்றியான எங்கள் முன்கூட்டங்களில் அவர்களின் பெயர் எங்கள் தேர்வாக இருந்தது. இவர்கள் இருவரும் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்!