நீங்க நினைக்கிறது இல்ல.. பும்ரா இதனாலதான் ஸ்பெஷல்.. விக்கெட் வரது இப்படிதான் – ஸ்டெய்ன் பேட்டி

0
677
Bumrah

நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்தது. அவருடைய பந்துவீச்சில் சிறப்பம்சம் குறித்து பாகிஸ்தான அணியின் வக்கார் யூனுஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன்ன் இருவரும் பாராட்டி பேசி இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக, இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக பும்ராவின் பந்துவீச்சுதான் இருந்தது.

- Advertisement -

தற்பொழுது டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவருடைய பந்து வீச்சு இந்தியா அணிக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றவர், பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் சிறப்பான முறையில் பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

பும்ரா வந்து வீச்சு குறித்து பேசிய வக்கார் யூனுஸ் ” பும்ரா ஒரு கிளாஸ் ஆக்ட். அவர் மிகவும் புத்திசாலி. அவர் இப்படி செய்வது முதல் முறை கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் இல்லாமல் அவர் விளையாடிய எல்லா அணிக்கு எதிராகவும் இப்படி செய்திருக்கிறார். சில ஆடுகளத்தில் துல்லியமாக என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவர் ஆரம்பத்தில் கைப்பற்றிய இரண்டு விக்கட்டுகள் தான் பாகிஸ்தான் அணியின் முதுகை உடைத்தது” என்று கூறியிருக்கிறார்.

பும்ரா குறித்து ஸ்டெய்ன் கூறும்பொழுது “அவருடைய தனித்திறமை என்னவென்றால் அவர் தன்னுடைய லென்த்தை மிகச் சிறப்பாக மாற்றிக் கொள்கிறார். அவருடைய லைனில் எப்பொழுதும் பிரச்சனை கிடையாது. அவரால் ஒரு யார்க்கரை நேராகவோ வைடாகவோ வீச முடியும். இதிலும் அவருக்கு பிரச்சனைகள் கிடையாது. நாம் அவர் லென்த்தை பற்றி பார்க்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் பொழுது வேறாகவும், அமெரிக்க சூழ்நிலைகளுக்கு அப்படியே தகுந்தபடியும் மாற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா vs அமெரிக்கா.. நாளை போட்டியில் மழை வாய்ப்பு.. மைதான நிலவரம்.. முழு தகவல்கள்

அவர் பந்துவீச்சை தொடங்கினாலும் சரி இல்லை தாமதமாக வந்தாலும் சரி, லென்த்தை அவர் அட்ஜஸ்ட் செய்வதுதான் பேட்ஸ்மேன்களுக்கு ரன் எடுப்பதில் சிக்கலை கொண்டு வருகிறது. திடீரென நீங்கள் அடிக்க முடியாத ஒரு பந்தை அடிக்கப் போய் விக்கெட்டை கொடுப்பீர்கள். இப்படித்தான் அவர் விக்கெட்டுகளை எடுக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.